»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன் வர வர சூட்டிங் ஸ்பாட்டுக்கு டிமிக்கி கொடுப்பது வழக்கமாகிவிட்டது. சரிவர ஒத்துழைப்பதில்லை என்றபுகார் இருந்தாலும் இன்றைய தேதியில் தமிழில் அதிகபட்ச ஊதியம் வாங்குவது அவர் தானாம்.

வெள்ளையாகவே ரூ. 35 லட்சம் வாங்கிவிடுகிறார்.

அவரது போக்குவரத்து, தங்கும் செலவு மற்றும் இத்யாதிகள்மேலும் சில லட்சங்களை விழுங்கிவிடுகிறதாம்.

இவரைத் தொடர்ந்த அதிக ஊதியம் தேடி வருவது ஜோதிகாவுக்கு. இவர் வாங்குவது ரூ. 25 லட்சம் பிளஸ்.

சமீபத்தில் இவர் நடித்த பிரியமான தோழியும், காக்க.. காக்கவும் படு பயங்கர சக்ஸஸ் ஆகிவிட்டதால்தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு படு கிராக்கி. ரூ. 30 லட்சம் வரை தரத் தயாராக நிற்கிறார்கள்.

அட்வான்ஸ் தொகையோடு இவரைப் பார்க்க அவர்கள் வந்தாலும் அனைவருக்கும் ஒரு கும்பிடு பிளஸ் ஒருகாப்பி கொடுத்து திருப்பி அனுப்பி வருகிறாராம.

நடிப்பைக் குறைத்துக் கொண்டுவிட்டு சூர்யாவுக்கு அன்பானமனைவியாகிவிடுவது தான் இப்போது அவரது ஒரே எய்ம் என்கிறார்கள்.

இதனால் இதுவரை ஒப்புக் கொண்ட படங்கள் தவிர, காக்க காக்க ரிலீசுக்குப் பின் யாரிடமும் அட்வான்ஸைவாங்கவில்லை ஜோதிகா.

இவருக்கு இணையாக காசு வாங்குவது மீரா ஜாஸ்மீன். இவரது ஊதியம் ரூ. 25 லட்சமாம்.

கேரளாவில் ரூ. 1 லட்சம்வாங்கிக் கொண்டிருந்தவர் இவர்.

ரூ. 25 லட்சத்தில் மம்மூட்டியை வைத்தே படம் எடுத்து முடித்துவிடும்கெட்டிக்காரர்கள் மலையாளிகள்.

ஆனால், அங்கிருந்து இங்கு வந்ததில் இருந்தே காசு விஷயத்தில் மிகக் கறாராக இருந்து 25 லட்சத்தைஅனாயசமாக அள்ளுகிறார் மீரா.

வந்த புதிதில் ஒரு படம ஓடிய உடனே ரூ. 40 முதல் 50 லட்சம் வரை கேட்டவர்இவர்.

இதனால் பல சான்ஸ்களை இவர் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது 25ல் நிற்கிறார்.

அடுத்த இடத்தில் இருப்பது நம்ம கிரண். இவரது சம்பளம் ரூ. 15 லட்சம்.

ஊதியம் குறைவாக இருப்பது போலத்தெரிந்தாலும், அதிக படங்களில் நடிப்பதன் மூலம் மற்றவர்களை விட, இப்போது உண்மையிலேயே அதிகம்சம்பாதிப்பது கிரண் தான்.

ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட ரூ. 5 லட்சத்தை லவட்டி விடுகிறார்

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil