»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பதிந்து போன, வலியுடன் கூடிய நினைவுகள்தான்கார்கில். இப்போது மீண்டும் கார்கில், ஸ்பாட்லைட்டுக்கு வருகிறது - வெள்ளித் திரைமூலம்.

"தி சல்யூட் என்ற மலையாளம் மற்றும் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள படம், நாடுமுழுவதும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோர்,ராணுவ வீரர்களின் மனைவியர் சங்கத்தின் பாராட்டு இந்தப் படத்திற்குக்கிடைத்துள்ளது.

ராணுவ வீரர்கள் குறித்த படம் இது. சிவபிரசாத் தயாரித்துள்ளார். அழகப்பன்இயக்கியுள்ளார். ரமேஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படம் சென்னையில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த,ராணுவத்துறை அதிகாரிகள், படக் குழுவினரை மனதாரப் பாராட்டினர். ராணுவவீரர்களின் மனிையர் சங்கத் தலைவர் ரஞ்சனா மாலிக்கும் படத்தைத்தயாரித்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்? தயாரிப்பாளர் (கதையும்இவருடையதுதான்) சிவ பிரசாத் கூறுகிறார் .... டி.வியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கநேர்ந்தது. அதில் ராணுவ வீரர் ஒருவரின் இறந்த உடல் தரையில் கிடத்தப்பட்டிருக்கும்.சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்திருப்பார்கள். அந்த வீரரின் மனைவி அழாமல்,முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், அமர்ந்திருப்பார்.

இறுதிச் சடங்கிற்காக வீரரின் எடுத்துச் செல்லப்படும். சவப் பெட்டியைத்தூக்கியவுடனேயே, அவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்த அந்தப் பெண்,உரத்த குரலில், ஜெய்ஹிந்த் என்பார். இந்த நிகழ்ச்சி என்னைப் பாதித்து விட்டது.

இதுதான் நான் சல்யூட் படத்தைத் தயாரிக்க இன்ஸ்பிரேஷனாக இருந்தது. மேலும்,கார்கில் மோதலின்போது உயிர் நீத்த வீரர்களின் மனைவியர், உடல் ரீதியாக நல்லநிலையில் இருந்தால் ராணுவத்தில் சேரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதைவைத்தே சல்யூட் கதையை உருவாக்கினேன்.

கதையில் வரும் ராணுவ வீரரின் மகன் ஒரு அநாதைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். அவளுக்குப் புதுவாழ்வு கொடுக்கிறான். அந்த சமயத்தில் போர்மூள்கிறது. புது மனைவியைப் பிரிந்து போர்க்களம் செல்கிறான் கணவன். அப்போதுஅவனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் போர்க்களத்தில் இருக்கும் வீரனின் மகனுக்குக் குழந்தை பிறக்கிறது.அதே சமயம், சண்டையின் போது உயிர் நீக்கிறான் கணவன். கைக் குழந்தையுடன்மனைவியும், மகனை இழந்த துயரத்தில் தாயும் நிர்க்கதியாகி நிற்கிறார்கள்.

துயரத்தையும் மீறி, உண்மை நிலையை யோசிக்கிறார்கள் இருவரும். மனைவி,ராணுவத்தில் சேர முடிவெடுக்கிறாள். குழந்தையையும் ராணுவத்தில்தான் சேர்ப்பேன்என முடிவெடுக்கிறாள்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, இது கதையாகத் தெரியாது. நாட்டில் எங்கோ ஒருமூலையில், ஏதாவது ஒரு ராணுவ வீரரின் வீட்டில் நடக்கும் சம்பவம் போன்றஉணர்வுதான் இருக்கும்.

இந்தப் படத்தில் இன்னொரு கிளைக் கதையும் இருக்கும். அதில் வரும் குடும்பத்தலைவன் வெளிநாட்டில் இருப்பான். இன்னொரு குடும்பத்தின் தலைவன், நாம்எப்போது வெளிநாடு போகப் போகிறோம் என்று கனவு கண்டு கொண்டிருப்பான்.இரு குடும்பத்தினருமே, நமது வீட்டில், யாருமே ராணுவத்தில் இல்லையே என்றுவருத்தப்படுவார்கள்.

இந்தப் படத்தை மலையாளம், தமிழில் தயாரிக்கக் காரணம், இரு மாநிலங்களுமேராணுவத்திற்கு நிறைய வீரர்களைக் கொடுத்துள்ளது. அதிலும், கார்கில் நிதிக்காகஇந்தியாவிலேயே அதிக அளவில் நிதி வசூல் கொடுத்தது தமிழகம்தான் என்றார் சிவப்பிரசாத்.

இந்தப் படத்திற்கு ரமேஷ் நாராயண் இசைஅமைத்துள்ளார். இவர் சில மலையாளதொலைக் காட்சித் தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார். 15 நாட்களில் முடிந்துவிட்ட இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு ரூ. 15 லட்சம் மட்டுமே.

இந்தப் படத்தை கேரள மாநில அரசு வாங்கியுள்ளது. தனது செய்தி, விளம்பரத் துறைமூலம், பள்ளிகள், கல்லூரிகளில் திரையிட்டு வருகிறது.

இந்தப் படத்திற்கு அரசு வரி விலக்கு அளித்தால் நல்லது என்கிறார் சிவப் பிரசாத். இதுஅவருடைய ஆதங்கம் மட்டுமல்ல, நம்முடையதும்தான்.

Read more about: cinema, kargil based story, the salute
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil