சமந்தா பிறந்தநாளை எங்கே கொண்டாடினார் தெரியுமா? #HBDSamantha
தமிழ், தெலுங்கு திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்துவரும் நடிகை சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் 'யு டர்ன்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார் சமந்தா.
சமந்தா ஷூட்டிங் ஸ்பாட்டை மிகவும் அதிகமாக நேசிப்பவர். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வது எதையோ இழந்தது போலிருக்கும் எனக் கூறியிருக்கிறார். அவருக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிறந்தநாள் கொண்டாடியதில் டபுள் ஹேப்பி.

சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான 'ரங்கஸ்தலம்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. அவர் நடித்துள்ள 'மகாநதி' (தமிழில் 'நடிகையர் திலகம்'), விஷாலுடன் இணைந்து நடித்துள்ள 'இரும்புத்துரை' ஆகிய படங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
சமந்தாவின் பிறந்தநாளுக்கு தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாக சைதன்யா உடனான திருமணத்திற்குப் பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இன்னும் ஸ்பெஷல்.
இன்று 'யு டர்ன்' படப்பில் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் சமந்தா. 'யு டர்ன்' படத்தின் இயக்குநர் பவன் குமார், நடிகர் ஆதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சமந்தா பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











