5 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா.. அகினேனி குடும்பத்தில் ஆளாளுக்கு எத்தனை கார்கள் தெரியுமா?

ஹைதராபாத்: டோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய குடும்பமாக அகினேனி குடும்பம் உள்ளது.

பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஷ்வரா ராவ் முதல் நாக சைதன்யா மற்றும் சமந்தா வரை எல்லாருமே சொகுசு கார்களின் பிரியர்கள்.

நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, சமந்தா, அகில் என குடும்பம் மொத்தமே சினிமாக்காரர்கள் தான். இவர்கள் அனைவரும் பல சொகுசு கார்களை தனித்தனியாக தங்கள் பயன்பாட்டுக்கென வைத்துள்ளனர்.

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

டோலிவுட்டின் மிகப்பெரிய சினிமா குடும்பமாக அக்கினேனி குடும்பம் திகழ்கிறது. பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஷ்வரா ராவ், நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அகில் என அனைவருமே பிரபல நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல கோடி வருமானங்களையும் ஒவ்வொருவரும் தனித்தனியாக சினிமா மூலம் ஈட்டி வருகின்றனர்.

பல நூறு கோடிகள் சொத்து

பல நூறு கோடிகள் சொத்து

நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் மற்றும் சமந்தா என அனைவருமே பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள். மேலும், பல ஆண்டுகளாக சினிமா குடும்பமாக இருக்கும் அக்கினேனி குடும்பத்தின் சொத்து பல நூறு கோடிகளாம். ஏகப்பட்ட பங்களாக்களை கொண்டுள்ள இவர்கள் அனைவருக்கும் சொகுசு கார்கள் மீதும் அளவற்ற பிரியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனாவுக்கு 2 கார்

நாகார்ஜுனாவுக்கு 2 கார்

ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் நடிகர் நாகார்ஜுனா. டோலிவுட்டில் சமீபத்தில் அவர் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக வெளியான வைல்ட் டாக்ஸ் படமும் வசூல் வேட்டை ஆடியது. நடிகர் நாகார்ஜுனாவுக்கு குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அளவுக்கு சொகுசு கார்களில் நாட்டம் இல்லை போல வெறும் இரண்டே இரண்டு சொகுசு கார்களை மட்டுமே வைத்துள்ளார். ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் 90.5 லட்சம் மதிப்புள்ள ஆடி A7.

அமலா அக்கினேனி

அமலா அக்கினேனி

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடா என ஏகப்பட்ட இந்திய மொழிகளில் நடித்து கலக்கியவர் நடிகை அமலா. டி. ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமான இவர் மெல்ல திறந்தது கனவு, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது என ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அமலா சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். 1.2 கோடி மதிப்பிலான போர்ஷ் கெய்னே சொகுசு காரை வைத்துள்ளார்.

நாக சைதன்யாவுக்கு 4 கார்

நாக சைதன்யாவுக்கு 4 கார்

கார்கள் மீது அளவற்ற பற்று கொண்டவர் நடிகர் நாக சைதன்யா. 2 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் வோக், 1.99 கோடி மதிப்பிலான நிசான் ஜிடி-ஆர், 4.37 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி மற்றும் 2.3 கோடி மதிப்பிலான மெர்சிடஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி உள்ளிட்ட உலகின் விலையுயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

சமந்தாவுக்கு 5 கார்

சமந்தாவுக்கு 5 கார்

கணவருக்கு போட்டியாக சொகுசு கார்களின் மீது நடிகை சமந்தாவுக்கு அதிக ஆர்வம் உள்ளது. அக்கினேனி குடும்பத்திலேயே அதிகபட்சமாக 5 சொகுசு கார்களை வைத்திருப்பவர் நடிகை சமந்தா தான். 1. ஜாகுவார் எக்ஸ் எஃப் - 62 லட்சம், 2. ரேஞ்ச் ரோவர் வோக் - 2 கோடி, ஆடி Q7 - 70 லட்சம், மெர்சிடஸ் பென்ஸ் G63 AMG -2.3 கோடி, போர்ஷ் கேமேன் GTS - 1.5 கோடி என பல சூப்பர் மாடல் கார்களை வைத்துள்ளாராம் சமந்தா.

Recommended Video

Family Man 2 -காக Samantha வாங்கிய சம்பளம் | Bollywoodல் கணவருக்கும் சிபாரிசு
சிம்ப்ளிசிட்டி அகில்

சிம்ப்ளிசிட்டி அகில்

நடிகர் நாகார்ஜுனாவை போலவே நடிகர் அகிலுக்கும் கார்கள் மீது எந்தவொரு ஈடுபாடுமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெறும் 35 லட்சம் மதிப்புள்ள ஸ்கோடா சூப்பர்ப் என்கிற காரை மட்டுமே வைத்துள்ளாராம். இத்தனை கார்களை வைக்கவே தனி கேரேஜ் இருக்கும் போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X