»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை சம்யுக்தா வர்மா அமெரிக்காவில் எப்.பி.ஐ. கமாண்டோக்களால் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை அமெரிக்க அதிகாரிகள் மரியாதையுடன் நடத்தியதாக சம்யுக்தா கூறியிருந்தார். ஆனால், அவரை விலங்குகள் மாட்டி, வயிற்றில்குத்தி மிகக் கொடுமையாக நடந்து கொண்ட விவரம் அவரது சக பயணி மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிக்காக சம்யுக்தா வர்மா உள்ளிட்ட கலைஞர்கள் அங்கு சென்றனர். கடந்த 17ம் தேதி சிகாக்கோவில்நிகழ்ச்சியை முடித்துவிட்டு நியூயார்க் சென்றபோது விமானத்தில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். மலையாளத்தில்அவர்கள் மிமிக்ரி செய்வதும், பாடுவதுமாக இருந்தனர்.

இவர்களை ஆப்கன் தீவிரவாதிகள் என்று நினைத்த விமானப் பணிப் பெண்கள் உடனே பைலட்டிடம் தகவல் தெரிவித்தனர். நியூயார்க்விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் இந்தக் குழுவினரை எப்.பி.ஐ. சுற்றி வளைத்து இழுத்துச் சென்று விசாரித்தது. இந்தத் தகவல்தெரியவந்தவுடன் கேரளாவில் அதிர்ச்சி பரவியது. கேரள எம்.பிக்கள் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கிளப்பினர்.

ஆனால், தங்களை நல்லபடியாகத் தான் அதிகாரிகள் நடத்தியதாக சம்யுக்தா உள்ளிட்ட குழுவினர் பின்னர் தெரிவித்தனர்.

உண்மையில் அவர்களை அமெரிக்க எப்.பி.ஐ. கமாண்டோக்கள் அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்தக் குழு பயணம் செய்த விமானத்தில் இருந்த இன்னொரு கேரள பெண் பயணி ஒருவர் திருவனந்தபுரத்தில் வசிக்கும் தனது உறவினர்மூலமாக நடந்த சம்பவம் குறித்து மலையாள பத்திரிக்கையான தேசாபிமானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித விவரம்:

சம்யுக்தா உள்ளிட்ட குழுவில் இருந்த பெண்கள் அனைவரும் சுடிதார் அணிந்திருந்தாலும், அவர்கள் பேசியதை வைத்தும் அவர்களைஆப்கானியர்கள் என அருகில் உட்கார்ந்திருந்த அமெரிக்கப் பெண் நினைத்துவிட்டார். உடனே விமானப் பணிப் பெண்களின் காதில் ஏதோசொன்னார். அவர் இந்தக் குழுவினரை சந்தேகத்துடன் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. தெரிந்திருந்தால் விளக்கம் தந்திருப்பேன்.

அந்தப் பெண் கூறியதைக் கேட்ட விமானப் பணிப் பெண்கள் உடனடியாக பைலட்டின் அறைக்கு ஓடினர். அவர் விமானத்தில் தீவிரவாதிகள்இருப்பதாக தகவல் தந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் எங்கள் விமானத்தின் இரு புறமும் அமெரிக்க விமானப் படை விமானங்கள் சூழ்ந்தன.

பின்னர் விமானம் அருகில் இருந்த லவ்காடியா விமானப் படை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின்கதவுகளை அதிரடியாகத் திறந்து கொண்டு எப்.பி.ஐ. கமாண்டோக்கள் விமானத்துக்குள் பாயந்தனர்.

சரியாக மலையாள நடிகர்கள் அமர்ந்திருந்த சீட்களை நோக்கி விரைந்த அந்த கமாண்டோக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.தீவிரவாதிகளை தாக்கும் பாணியில் இவர்களையும் வயிற்றிலும் முகத்திலும் குத்தினர். சம்யுக்தாவின் வயிற்றில் 3 குத்துகள் விழுந்தனர்.அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்களுக்கும் சுருண்டு விழும் வரை தாக்குதல் நடந்தது.

பின்னர் அனைவரையும் பின் பக்கமாக கைகளில் விலங்கு மாட்டி விமானத்தின் வெளியே இழுத்துச் சென்றனர்.

இதன் பின்னர் விமானம் கிளம்பி நியூயார்க் போய்ச் சேர்ந்தது. இவ்வாறு அந்த கேரளப் பெண் தேசாபிமானி பத்திரிக்கைக்கு கடிதம்எழுதியுள்ளார்.

இந்த விவரங்கள் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்பதால் சம்யுக்தா வர்மா மறைத்துவிட்டதாகத் தெரிகிறது. தன்னை முதலில்அதிகாரிகள் மிரட்டியதாகவும் பின்னர் மிகவும் கெளரவமாக நடத்தியதாகவும் வர்மா கூறியிருந்தார்.

ஆனால், இவர்கள் அமெரிக்கர்களால் மிகக் கேவலமாக நடத்தப்பட்டுள்ள விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. தேசாபிமானி பத்திரிக்கைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமானது. அமெரிக்காவில் இந்திய பயணிகள் துன்புறுத்தப்படுதை சி.பி.எம். எம்பிக்கள்நாடாளுமன்றத்தில் கிளப்புவார்கள் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil