twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரப்பன் வாழ்க்கை மர்மத்தை அவிழ்க்கும் சந்தனக்காடு!

    By Staff
    |
     stills from Santhanakkadu mega serial in Makkal tv
    தமிழ் தொலைக்காட்சிகளில் தனக்கென தனித்த இடத்தைப் பிடித்துள்ள மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சந்தனக்காடு.

    நேயர்களின் பெருத்த ஆதரவோடு இத்தொடர் ஐம்பதாவது பகுதியைக் கடந்துள்ளது. சந்தனக் கடத்தல்காரன் என்று வர்ணிக்கப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையை ஒப்பனையில்லாமல் வெளிப்படுத்தி வரும் இந்தத் தொடரை ஒரு தேர்ந்த திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கி வருகிறார், வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்குப் போயிருக்கும் இயக்குநர் வ.கெளதமன்.

    காதலே நிம்மதி படத்தை இயக்கிய இவர், அடிப்படையில் தமிழுணர்வும், இனப் பற்றும் மிக்கவர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் அழைத்து பல முக்கிய தொடர்களை இயக்கும்படி கேட்டுக் கொண்டாராம்.

    மக்கள் தொலைக்காட்சிக்காக இவர் முதலில் இயக்கிய தொடர் ஆட்டோ சங்கர், வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பும், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், சந்தனக்காடு தொடரை எடுக்கத் தூண்டியதாம்.

    இந்தத் தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி
    முத்துலட்சுமி, தொடரைப் பார்த்துவிட்டு மனம் மாறி, தான் போட்ட
    வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார்.

    கௌதமனை தொலைபேசியில் அழைத்து பாராட்டும் தெரிவித்தாராம். இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளும் ஒருசேர கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.1) ஒளிபரப்பானது.

    "சந்தனக்காடு' குறித்து இயக்குநர் பாலா கூறுகையில், "என்னதான் கடுமையான வேலைப் பளு இருந்தாலும் இந்தத் தொடரை நான் பார்க்கத் தவறியதே இல்லை. வீரப்பன் விஷயத்தில் புதைந்துள்ள பல மர்மங்களை இத்தொடர் துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது...சில சமயம் அதனுடைய தொடர்ச்சியைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எதையோ இழந்ததைப் போல உணர்ந்தேன். ஒரு சிறந்த திரைப்படத்துக்கான கதைக் களத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது'' என்கிறார்.

    பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வரும் சந்தனக்காடு மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

    இத்தொடர் குறித்து இயக்குந்ர கௌதமன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,

    இப்படி ஒரு தொடரை மக்கள் தொலைக்காட்சியைத் தவிர வேறு எந்த தொலைக்காட்சியிலும் எதிர்பார்க்க முடியாது. தமிழக-கர்நாடக காவல் துறையின் அதிகார மீறல்கள் ஒரு இனத்தையே எப்படியெல்லாம் அழிக்கப் பார்த்தது என்பதற்கு, வீரப்பனைப் பிடிக்கிறோம் எனும் பெயரில் அதிரடிப்படை செய்த அக்கிரமங்களே சான்று.

    வெறும் சந்தேகத்தின் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக எத்தனை இளைஞர்களைக் கொன்று குவித்திருக்கிறது இந்த அதிரடிப் படை?. அந்த மலைக்கிராம மக்களை இவர்களால் கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன் பாதுகாத்து வந்தான், ஆனால் காவல்துறை கொன்று குவித்தது.

    என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்..இவற்றைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் நாளைய வரலாறு நம்மை மன்னிக்காது. அந்த ஒடுக்கப்பட்ட மக்களில் நானும் ஒருவன் என்ற உணர்வில்தான் இந்தத் தொடரை இயக்குகிறேன்.

    வீரப்பனை ஒரு தியாக வீரனாக சித்தரிப்பதல்ல இத் தொடரின் நோக்கம். அவனை பெரிய தியாகியாகவும் நாங்கள் பார்க்கவில்லை.

    பாதிக்கப்பட்ட என் மக்களின் அவலக்குரலைப் பதிவு செய்வதே இந்தத் தொடரின் நோக்கம். அதை மட்டும் தான் செய்து வருகிறோம். வேறு தொலைக்காட்சியில் இத் தொடரை ஒளிபரப்பி இருந்தால் ஒருவேளை எனக்கு மிரட்டல்கள் வந்திருக்கலாம். ஆனால் இது மருத்துவர் அய்யாவின் மக்கள் தொலைக்காட்சி என்பதால் யாருக்கும் அந்த துணிவு வரவில்லை போலிருக்கிறது என்றார் கெளதமன்.

    இத்தொடரை முடித்த பிறகு, இரு திரைப்படங்களை இயக்கப் போகிறாராம் கௌதமன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X