»   »  சாக்லேட் வாய்ஸ் சந்தியா

சாக்லேட் வாய்ஸ் சந்தியா

Subscribe to Oneindia Tamil

சந்தியா இனிமேல் தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே பேசப்போகிறாராம்.

காதல் சந்தியா இப்போது தெலுங்கிலும் பிசியாகி வருகிறார். தமிழில் அவரிடம்இப்போது கூடல் நகர் மட்டுமே கையில் உள்ளது. சமீபத்தில் காதல் தெலுங்கில் டப்ஆகி பெரும் ஹிட் ஆனது. இதையடுத்து அவரைத் தேடி நேரடித் தெலுங்குப் படங்கள்ஓடி வந்தன.

அதில் அன்னாவரம் படத்தில் தங்கச்சி வேடத்தில் கலக்கியிருந்தார் சந்தியா. இப்படம்ஆந்திராவில் ஹிட் ஆகியுள்ளதாம். சந்தியாவுக்கு ரசிகர் வட்டாரம்உருவாகியுள்ளதாம். இது சந்தியாவுக்கு சந்தோஷத்தைத் தந்துள்ளது.

அன்னாவரம் குறித்து அவரிடம் கேட்டால், எனக்கு இந்தப் படத்தில் நடிக்கப்போவதற்கு முன்பு ஒரு தெலுங்கு வார்த்தை கூட தெரியாது. ஷூட்டிங்குக்குப்போனபோதுதான் தெலுங்கு கற்றுக் கொள்ள வேண்டும், நாமே டப்பிங் பேசவேண்டும் என தீர்மானித்தேன்.

எனது விருப்பத்திற்கேற்ப இயக்குநரும் என்னையே டப்பிங் பேசச் சொன்னார்.முதலில் தடுமாற்றமாக இருந்தது. ஆனாலும் பிக்கப் செய்து பேசி அசத்தி விட்டேன்.நான் நன்றாக பேசியுள்ளதாக யூனிட்டில் எல்லோரும் சொன்னபோது சந்தோஷமாகிவிட்டது.

அன்னாவரம் படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும், குறிப்பாக எனக்கும்கிடைக்ககும் என்கிறார்கள். ஒரே திரில்லாக இருக்கிறது என்று புல்லரிக்கிறார் சந்தியா.

இந்த அனுபவத்தையடுத்து இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங்பேசப் போகிறாராம். அதேபோல தெலுங்கில் இந்தப் படத்தோடு தங்கச்சி வேடத்திற்குகுட்பை சொல்லி விட்டாராம் சந்தியா. இனிமேல் நடித்தால் ஹீரோயினாக மட்டுமேநடிப்பாராம்.

சொந்தமாக டப்பிங் பேசுவதற்கு என்ன ஸ்பெஷல் காரணம் என்றால், விருது கிடைக்கவேண்டும் என்றால் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். காதல் படம்அருமையாக வந்திருந்தும் கூட அப்படத்தில் நான் முழுமையாக டப்பிங்பேசவில்லை. சில காட்சிகளில் எனக்கு வேறு வாய்ஸ் கொடுக்கப்பட்டது.அதனால்தான் படத்தை விருதுக்கு அனுப்பவில்லை.

எனது கேரக்டர் விருதுக்குப் போயிருந்தால் நிச்சயம் விருதைத் தட்டியிருப்பேன்.அந்த ஏமாற்றம் இன்னும் இருக்கிறது. ஸோ, இனிமேல் நான் நடிக்கும் படங்களில்நானே டப்பிங் பேசப் போகிறேன். அப்பதானே விருதையும் அள்ள முடியும்.

அத்தோடு எனது வாய்ஸும் நன்றாகத்தான் இருக்கிறது, சாக்லேட் வாய்ஸ் என்று என்தோழிகள் அடிக்கடி கூறுவார்கள். ஸோ, எனக்காக இனிமேல் நானே பேசுவதாக முடிவுசெய்துள்ளேன் என்கிறார்.

இந்த ஆண்டு சந்தியா அதிகம் எதிர்பார்க்கும் படங்கள் இரண்டு. ஒன்று பரத்துடன்ஜோடி போட்டுள்ள கூடல் நகர். இதில் கண்டாங்கிச் சேலையில் படு ரவுசாக வசனம்பேசி அசத்தலாக நடித்துள்ளாராம் சந்தியா.

இன்னொரு படம் செல்வராகவனின் இது மாலை நேரத்து மயக்கம். இதில் சூர்யாவின்தம்பி கார்த்தியுடன் ஜோடி போடுகிறார் சந்தியா. இந்தப் படத்தையும் அதிகம்எதிர்பார்க்கிறாராம்.

2007 சந்தியா ஆண்டாக மலரட்டும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil