»   »  செட்டிலாகும் சன் டிவி சந்தியா!

செட்டிலாகும் சன் டிவி சந்தியா!

Subscribe to Oneindia Tamil

சன் மியூசிக் சந்தியா, ஏப்ரலுக்குப் பிறகு ஹனி மூன் காணப் போகிறார். எஸ்! கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்.


சன் மியூசிக் அழகு தேவதைகளில் சந்தியாவுக்கு மட்டும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. எப்படிப்பட் ஜொள்ளு ராஜாவாக இருந்தாலும், படு கூலாகஹேண்டில் செய்வதில் சந்தியாவுக்கு நிகர் அவரேதான்.

அவருக்கு கல்யாணம் என்ற செய்தி, ஜொள்ளர்களுக்கு நிச்சயம் சந்தோஷமான செய்தி கிடையாது. ஆனால் தான் கட்டிக் கொள்ளப் போகும்பார்ட்டியை நினைத்து படு சந்தோஷமாக இருக்கிறார் சந்தியா.

சந்தியாவை மணக்கப் போகும் பையனின் பெயர் விபின்தாஸ். சாப்ட்வேர் என்ஜீனிஜர். இது ஒரு காதல் கல்யாணம். ஆனால் பயங்கரகலாட்டாவுக்குப் பிறகு கூடி வந்த காதலாம் இது (அதுதானே வழக்கம்!).

இந்த இரண்டும் முதலில் ஜெட் ஏர்வேஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததுகள்.

நான் அப்பதான் வேலைக்கு சேர்ந்திருந்தேன் பாஸ். எனக்கு விபின்தாஸ் பாஸ்!. ஆனால் எனக்கு அவரைப் பார்த்தாலே பிடிக்காது, பாவக்காயைஅப்படியே சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு கசப்பு விபினைப் பார்த்தால் வரும்.

ஏன் இப்படி ஒரு கொலை வெறி??

அதுக்கு காரணம் விபினோட, உர்ராங் உட்டாங், உம்மணா மூஞ்சிதான் காரணம். யாரிடமும் சரியாகப் பேச மாட்டார். ஆனால் நான் அப்படியேநேர் எதிர். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் கடலை போடாமல் நகரவே மாட்டேன்.

இதனாலேயே எங்களுக்குள் ஒத்துவராமல் ஆளுக்கு ஒரு பக்கமாக முறைத்தபடி இருந்தோம்.

அப்படிப்பட்ட விபினுக்கும், எனக்கும் ஒரு நாள் நட்பு முகிழ்த்தது. திடீரென என்னிடம் வந்த அவர் நான் வேலையை விட்டு விலகப் போகிறேன்என்று கூறினார். என்னவோ தெரியவில்லை, அந்த வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது.

அப்படியே இருவரும் தோஸ்துகள் ஆகி விட்டோம். பேசிப் பேசியே அவரை காதலராக பிக்கப் செய்து விட்டேன். காதலை முதலில் அவர்தான்சொன்னார். நானும் ஓ.கே. என்று கூறி விட்டேன்.

இப்போது இரு வீட்டிலும் ஒத்துக் கொண்டு கல்யாணத்தை பேசி முடித்து விட்டனர். நவம்பர்ல நிச்சயம் பண்ணிட்டாங்க, ஏப்ரலில் கல்யாணம் என்றுகண்ணடித்து காதல் கதையை சொல்லி முடித்தார் சந்தியா.

விபின் தாஸை நமக்கு சின்னப் புள்ளையிலிருந்தே நல்லாத் தெரியும்? தம்பி யாரு தெரியுமா.? தம்பிக்கு எந்த ஊரு, அம்மா, நீங்கள் கேட்டவைஎன கிட்டத்தட்ட 75 படங்களில் மாஸ்டர் விமல் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் விமல்.

மூஞ்சி ஞாபகத்திற்கு வரவில்லை என்றால் மேலே சொன்ன படங்களை தேடிப் பிடித்துப் பார்த்து மெமரியில் ஏற்றிக் கொள்ளவும்.

ஒரு சன் செட் (செட்டில்) ஆகப் போகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil