»   »  சந்தியா போவாரா?

சந்தியா போவாரா?

Subscribe to Oneindia Tamil

தமிழில் அசத்திய சித்திரம் பேசுதடி இப்போது கன்னடத்திலும் மாத்தாட போகிறது.

பாவனா என்ற பப்பளக்கா தேவதையை தமிழுக்கு தந்த படம்தான் சித்திரம் பேசுதடி.முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் ஆகிப் போன பாவனா இப்போது நான் ஸ்டாப்ஆக ஓடிக் கொண்டிருக்கிறார்.

சித்திரம் பேசுதடி மூலம் ஓவர்நைட்டில் டாப்புக்கு எகிறியவர்கள் இயக்குனர் மிஷ்கின்,ஹீரோயின் பாவனா, கானா உலகநாதன் ஆகியோர். அதிலும் கானா உலகநாதன்ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய் விட்டது.

இந்த மூன்று பேரில் பாவனாதான் படு பிசியான நபராக மாறியுள்ளார். கை நிறையப்படங்களுடன் கலக்கி வரும் பாவனா, அடுத்த ஆண்டின் நம்பர் ஒன் நாயகியாவதேதனது லட்சியமாக கூறி வருகிறார். அவர் சொல்வது போலத்தான் நடக்கும் என்பதுஅவர் போகும் வேகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

பாவனாவின் குறும்பு, கானாவின் காந்தக் குரல் பாட்டு, மாளவிகாவின் வாள மீனஆட்டம் ஆட்டம், பழைய கதையை அழகாக கொடுத்த மிஷ்கின் என ஏகப்பட்டபிளஸ் பாயிண்டுகளுடன் வசூலை அள்ளிய சித்திரம் பேசுதடி இப்போது கன்னடத்தில்ரீமேக் ஆகவுள்ளது.

கன்னடப் பதிப்பில் பாவனா நடித்த கேரக்டரில் நடிக்க சந்தியாவைஅணுகியுள்ளார்களாம். ஆனால் சந்தியா பாப்பாவோ கூடல் நகர், தூண்டில், இதுமாலை நேரத்து மயக்கம் என வரிசையாக படங்களில் பிசியாக உள்ளார்.

இதனால் கன்னட வாய்ப்பை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளாராம்.

ஆனால், கன்னடத்தில் முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலையில் ஒருவேளைகன்னட சித்திரம் பேசுதடி சூப்பர்ஹிட் ஆனால் தனக்கு அங்கு நியாைன, முக்கியஇடம் கிடைக்கும் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளும் ஆசையிலும் இருக்கிறாராம்.

மறுபக்கம் தமிழில் இப்போதுதான் நிறையப் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.அதற்குள் அதைக் கெடுத்துக் கொண்டால் ஏறக் கட்டி விடுவார்களே என்ற பயமும்சந்தியாவை மிரட்டி வருகிறது.

சந்தியா நீ கொஞ்சம் சிந்திய்யா...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil