twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்கவியின் புது அவதாரம்! பிதாமகனில் கஞ்சா விற்ற ரசிகாவைப் போல கன்னடத்தில் தயாராகவுள்ளபிதாமகனில் சங்கவி கையில் கஞ்சாவைக் கொடுத்துள்ளார்கள்.கன்னடத் திரையுலகுக்கு ஒரு பெருமை உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில்வெளியான சூப்பர் ஹிட் படங்களை அப்படியே ரீமேக் செய்து வசூலை அள்ளிவிடுவார்கள். அந்த விஷயத்தில் மற்ற எந்த்த திரையுலகையும் விட கன்னடத்திரையுலகினர் கெட்டிக்காரர்கள்.கிரேஸி ஸ்டார் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ரவிச்சந்திரன் ரீமேக் படங்களில்மட்டுமே நடித்து பெரிய ஆளானவர். அவரது இடத்தை இப்போது ஏகப்பட் பேர்பங்குப் போட ஆரம்பித்துள்ளனர். உபேந்திரா முதல் நேற்று வந்த சுதீப் வரைஏகப்பட்ட நடிகர்கள் தமிழ், தெலுங்குப் பட ரீமேக் படங்களின் நாயகர்களாகமிளிர்கிறார்கள்.பாக்யராஜ் படத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர் போல அவரது படங்கள்முக்கால்வாசியை ரீமேக் செய்தவர் ரவிச்சந்திரன். அதேபோல அஜீத், விக்ரம் நடித்தபடங்களை அப்படியே ரீமேக் செய்து நடித்து வருகிறார் சுதீப்.இப்போது விக்ரம், சூர்யாவின் அட்டகாச நடிப்பில் உருவான, விக்ரமுக்கு தேசியவிருது வாங்கிக் கொடுத்த பிதாமகன் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. உபேந்திரா தான்இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். விக்ரம் வேடத்தில் அவரேநடிக்கப் போகிறார். இதில் கஞ்சா விற்கும் சங்கீதாவின் வேடத்தில் நடிக்கப் போகிறவர்சங்கவி.கன்னடத்து பார்த்திபன் என்று பெயர் பெற்ற உபேந்திரா, தனது படங்களில் காட்டும்வித்தியாசமான கோணங்கித்தனங்களை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.பிதாமகனை ரீமேக் செய்யவுள்ள உபேந்திரா விக்ரம் வேடத்தை தானே செய்துவிட்டு,சூர்யா வேடத்தில் தர்ஷன் என்பவரை நடிக்க வைக்கவுள்ளார்.லைலா வேடத்திற்குத்தான் சரியான ஆள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறார்களாம்.ஆனாலும் எப்படியாவது அந்த சுட்டிப் பொண்ணு வேடத்திற்குரிய நடிகையை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் உப்பி (இப்படித்தான் இவரை கன்னடத்தில்கூப்பிடுகிறார்கள்). ரசிகா என்ற சங்கீதாவும், சங்கவியும் பெஸ்ட் தோஸ்துகள். நெருங்கிய தோழிகளானஇருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்வது வழக்கம். நீங்கள் தமிழில் செய்த கஞ்சாபெண்மணி வேடத்தில் நான்தான் நடிக்கப் போகிறேன் என்று சங்கீதாவிடம் போன்செய்து சங்கவி சொன்னபோது சங்கீதா மகிழ்ச்சியாகி விட்டாராம்.கலக்கு, கலக்கு என்று பாராட்டிய அவர் கஞ்சா விற்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று போனிலேயே பாடம் நடத்தி விட்டாராம். கன்னடத் திரையுலகில் முன்பு ஒரு கட்டுப்பாடு இருந்தது. பிற மொழிப் படங்களைரீமேக் செய்யும்போது, அந்தப் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகஇருக்க வேண்டும் என்பதே அது. அந்தக் கட்டுப்பாட்டை சமீபத்தில் நீக்கிவிட்டார்கள். இதனால் பிற மொழிகளில் வெற்றிகரமாக வெளியான லேட்டஸ்ட்படங்களை இப்போது சூடு குறைவதற்குள் ரீமேக் செய்து விடுகிறார்கள் கன்னடத்தில்.சமீபத்தில் சேரனின் ஆட்டோகிராப் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் கன்னடத்தில்வெளியானது. இதில் சேரன் வேடத்தில் சுதீப் நடித்தார். அதேபோல சேரனின்இன்னொரு மெகா ஹிட் படமான பொற்காலமும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது.

    By Staff
    |
    பிதாமகனில் கஞ்சா விற்ற ரசிகாவைப் போல கன்னடத்தில் தயாராகவுள்ளபிதாமகனில் சங்கவி கையில் கஞ்சாவைக் கொடுத்துள்ளார்கள்.

    கன்னடத் திரையுலகுக்கு ஒரு பெருமை உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில்வெளியான சூப்பர் ஹிட் படங்களை அப்படியே ரீமேக் செய்து வசூலை அள்ளிவிடுவார்கள். அந்த விஷயத்தில் மற்ற எந்த்த திரையுலகையும் விட கன்னடத்திரையுலகினர் கெட்டிக்காரர்கள்.

    கிரேஸி ஸ்டார் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ரவிச்சந்திரன் ரீமேக் படங்களில்மட்டுமே நடித்து பெரிய ஆளானவர். அவரது இடத்தை இப்போது ஏகப்பட் பேர்பங்குப் போட ஆரம்பித்துள்ளனர். உபேந்திரா முதல் நேற்று வந்த சுதீப் வரைஏகப்பட்ட நடிகர்கள் தமிழ், தெலுங்குப் பட ரீமேக் படங்களின் நாயகர்களாகமிளிர்கிறார்கள்.

    பாக்யராஜ் படத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர் போல அவரது படங்கள்முக்கால்வாசியை ரீமேக் செய்தவர் ரவிச்சந்திரன். அதேபோல அஜீத், விக்ரம் நடித்தபடங்களை அப்படியே ரீமேக் செய்து நடித்து வருகிறார் சுதீப்.

    இப்போது விக்ரம், சூர்யாவின் அட்டகாச நடிப்பில் உருவான, விக்ரமுக்கு தேசியவிருது வாங்கிக் கொடுத்த பிதாமகன் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. உபேந்திரா தான்இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். விக்ரம் வேடத்தில் அவரேநடிக்கப் போகிறார். இதில் கஞ்சா விற்கும் சங்கீதாவின் வேடத்தில் நடிக்கப் போகிறவர்சங்கவி.

    கன்னடத்து பார்த்திபன் என்று பெயர் பெற்ற உபேந்திரா, தனது படங்களில் காட்டும்வித்தியாசமான கோணங்கித்தனங்களை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.பிதாமகனை ரீமேக் செய்யவுள்ள உபேந்திரா விக்ரம் வேடத்தை தானே செய்துவிட்டு,சூர்யா வேடத்தில் தர்ஷன் என்பவரை நடிக்க வைக்கவுள்ளார்.

    லைலா வேடத்திற்குத்தான் சரியான ஆள் கிடைக்காமல் அவஸ்தைப்படுகிறார்களாம்.ஆனாலும் எப்படியாவது அந்த சுட்டிப் பொண்ணு வேடத்திற்குரிய நடிகையை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் உப்பி (இப்படித்தான் இவரை கன்னடத்தில்கூப்பிடுகிறார்கள்).

    ரசிகா என்ற சங்கீதாவும், சங்கவியும் பெஸ்ட் தோஸ்துகள். நெருங்கிய தோழிகளானஇருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்வது வழக்கம். நீங்கள் தமிழில் செய்த கஞ்சாபெண்மணி வேடத்தில் நான்தான் நடிக்கப் போகிறேன் என்று சங்கீதாவிடம் போன்செய்து சங்கவி சொன்னபோது சங்கீதா மகிழ்ச்சியாகி விட்டாராம்.

    கலக்கு, கலக்கு என்று பாராட்டிய அவர் கஞ்சா விற்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று போனிலேயே பாடம் நடத்தி விட்டாராம்.

    கன்னடத் திரையுலகில் முன்பு ஒரு கட்டுப்பாடு இருந்தது. பிற மொழிப் படங்களைரீமேக் செய்யும்போது, அந்தப் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகஇருக்க வேண்டும் என்பதே அது. அந்தக் கட்டுப்பாட்டை சமீபத்தில் நீக்கிவிட்டார்கள். இதனால் பிற மொழிகளில் வெற்றிகரமாக வெளியான லேட்டஸ்ட்படங்களை இப்போது சூடு குறைவதற்குள் ரீமேக் செய்து விடுகிறார்கள் கன்னடத்தில்.

    சமீபத்தில் சேரனின் ஆட்டோகிராப் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் கன்னடத்தில்வெளியானது. இதில் சேரன் வேடத்தில் சுதீப் நடித்தார். அதேபோல சேரனின்இன்னொரு மெகா ஹிட் படமான பொற்காலமும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X