»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சங்கவி பொங்கி எழத் திட்டமிட்டு விட்டார்.

விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் டூயட் பாடிக் கொண்டிருந்த இந்த கன்னடத்து பைங்கிளி, பின்னர் பட வாய்ப்புகள் மங்கிப் போய் ஆந்திரா பக்கம் கரைஒதுங்கியது.

அங்கு கொஞ்ச காலம் குப்பை கொட்டிய பிறகு உடலை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு மீண்டும் கோலிவுட்டிற்கே ரிடர்ன் ஆனது.

பாபா ஒரு கை கொடுத்தார். பஞ்சதந்திரத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் மேற்கொண்டு படங்கள் கொட்டவில்லை. நான் ரெடி, நீங்க ரெடியா என்றுகேட்டும் படங்கள் வரவில்லை.

இதனால் வெறுத்துப் போன சங்கவி, இப்போது கவர்ச்சிக் கனலாக மாறி தமிழ் ரசிகர்களை வதைக்கப் போகிறாராம். மும்தாஜ் லெவலுக்குஇனிமேல் கவர்ச்சியாட்டம் போட அவர் முடிவு செய்து விட்டாராம்.

சிங்கிள் பாட்டாக இருந்தாலும் சரி, சில்லறை கிடைத்தால் போதும் என்ற அளவுக்கு இறங்கி வந்துள்ள சங்கவி இனிமேல் கவர்ச்சி, கவர்ச்சி,கவர்ச்சியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதே தனது லட்சியம் என்று கூறி வருகிறார்.

இதற்காக உடலை மீண்டும் குண்டாக்கி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil