»   »  தண்ணி கேட்கும் சங்கீதா

தண்ணி கேட்கும் சங்கீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநரைக் கொன்று விட்டு சிறையில் அடைபட்டுள்ள நடிகை சங்கீதா, குடிக்க சரக்குக் கிடைக்காமல் சங்கடப்படுகிறாராம்.

சமீபத்தில் திரையுலகை கலக்கிய சம்பவம் புதுமுக இயக்குநர் செல்வாவின் கொலை. அவரைக் கொன்றது கூடவே இருந்த புதுமுக நடிகை சங்கீதா என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காம இச்சைக்கு மட்டும் செல்வா தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாலும், செலவுக்குக் காசு கொடுக்காததாலும்தான் கொலை ெசய்தேன் என்று

பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் சங்கீதா. செல்வாவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் தினசரி இரவு இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கமாம்.

இப்படி தினசரி குடியும் கூத்துமாக இருந்து விட்டதால், சிறையில் மது அருந்தாமல் இருப்பு கொள்ள முடியவில்லையாம் சங்கீதாவுக்கு.

சிறைக்குள் மது கிடைக்குமா என்று விசாரித்தாராம். இது ஜெயிலும்மா, இப்படியெல்லாம் கேட்கப்படாது என்று சக கைதிகள் சங்கீதாவை சாந்தப்படுத்தினார்களாம்.

இருந்தாலும் மது ஆசையை சங்கீதாவால் அடக்கிக் கொள்ள முடியவில்லையாம். வியாழக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்துக்கு சங்கீதாவைக் கூட்டி வந்தனர்.

அப்போது செல்வாவைக் கொன்றது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் சங்கீதா.

வாக்குமூலம் கொடுக்க அழைத்து வரப்பட்ட சங்கீதா தன்னைக் காண வந்த உறவினர்களிடம், சிறைக்கு வந்தது முதல் குடிக்கவே முடியவில்லை.

ஒரு குவார்ட்டர் வாங்கிக் கொடுங்களேன் என்று கெஞ்சலாக கேட்டாராம்.

இதைக் கேட்டு மிரண்டு போன பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸார், கோர்ட் வளாகத்தில் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கூறி எச்சரித்தார்களாம்.

இதனால் சங்கீதாவின் முகம் வாடிப் போய் விட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil