»   »  அண்ணியின் பொறுமல்! உயிர் படத்தில் கணவரின் தம்பியை அடையத் துடிக்கும் அண்ணி கேரக்டரில்நடித்துள்ள சங்கீதாவுக்கு, வசவுகளும், பாராட்டுக்களும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறதாம்.ஸ்ரீகாந்த், ஷம்ருத்தா, சங்கீதா நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் சர்ச்சையில்சிக்கியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த்தின் அண்ணியாக வருகிறார் சங்கீதா. கொழுந்தன் என்றஉறவையும் மீறி, ஸ்ரீகாந்த் மீது காமம் கொள்கிறார்.அவரை அடையத் துடிக்கிறார். அதற்கான காரியங்களிலும் ஈடுபடுகிறார். சங்கீதாவின்இந்த கேரக்டர், பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் கதாபாத்திரம் இது. இப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று பலர் கிளம்பியுள்ளனர். முதல்வர் கருணாநிதிக்கும் படத்தைத் தடைசெய்யக் கோரி தந்திகள் பறந்தவண்ணம் உள்ளன.ஆனால் அண்ணி சங்கீதாவுக்கு இந்த எதிர்ப்புகள் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளன.இந்தப் படத்தில் அருந்ததியை (சங்கீதா நடித்த கேரக்டரின் பெயர்) நல்ல பொண்ணாகநாங்கள் காட்டவில்லை.மோசமான பெண்ணாகத்தான் சித்தரித்துள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட பெண்ணுக்கு இதுதான் முடிவு என்றும் காட்டியுள்ளோம். நல்லகுணடைய பெண்ணாக அருந்ததியைக் காட்ட முயற்சிக்கவில்லை.அப்படி இருக்கையில், இந்த படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஏன்கூறுகிறார்கள் என்று புரியவில்லை. ஊரில் நடக்காததையா இதில் காட்டியுள்ளோம்?இல்லையே, சமீபத்தில் கூட சென்னையில் 2 கொடூரக் கொலைகள் நடந்தன.இரண்டுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்குத் தெரியும். அதில் ஒரு கொலையில்சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் சித்தி, மகன் முறை வருகிறவர்கள்.இருவரும் கள்ளக்காதலர்கள். இந்தக் காதலால்தான் அந்தப் பெண்ணின் கணவர்உயிரிழந்தார். இதை விடவா உயிர் படத்தில் காட்சிகளை வைத்து விட்டோம்? இப்படத்தில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை. கேரக்டர் குறித்து இயககுநர் சாமிசொன்னபோதே, கிளாமர் காட்ட மாட்டேன், உடம்பைக் காட்டி நடிக்க மாட்டேன்என்று கூறி விட்டேன்.அதன்படியேதான் நடித்தேன். எனவே இதை ஆபாசமான பாத்திரம் என்றும் கூறமுடியாது. வாலி படத்தில் அஜீத் நடிக்கவில்லையா? பிரகாஷ் ராஜ் ஆசை படத்தில்நடிக்கவில்லையா? அந்தப் படங்களில் எல்லாம் முறையற்ற உறவுகளைத்தானேகாட்டினார்கள்?.ஆண்கள் நடித்தால் பாராட்டு, பெண்கள் நடித்தால் வசவா? இதென்ன நியாயம்?நடிகர்கள் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதைப் போல நாங்களும் நடிக்கிறோம்.இதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.உயிர் படம் நிச்சயம் வெற்றி பெறும். இதேபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள்எனக்குக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பொருமித் தள்ளி விட்டார் சங்கீதா.நிஜத்தில் குண்டக்க மண்டக்க மேட்டர்கள் எல்லாம் அரங்கேறி அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சங்கீதாவின் புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான்செய்கிறது.

அண்ணியின் பொறுமல்! உயிர் படத்தில் கணவரின் தம்பியை அடையத் துடிக்கும் அண்ணி கேரக்டரில்நடித்துள்ள சங்கீதாவுக்கு, வசவுகளும், பாராட்டுக்களும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறதாம்.ஸ்ரீகாந்த், ஷம்ருத்தா, சங்கீதா நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் சர்ச்சையில்சிக்கியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த்தின் அண்ணியாக வருகிறார் சங்கீதா. கொழுந்தன் என்றஉறவையும் மீறி, ஸ்ரீகாந்த் மீது காமம் கொள்கிறார்.அவரை அடையத் துடிக்கிறார். அதற்கான காரியங்களிலும் ஈடுபடுகிறார். சங்கீதாவின்இந்த கேரக்டர், பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் கதாபாத்திரம் இது. இப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று பலர் கிளம்பியுள்ளனர். முதல்வர் கருணாநிதிக்கும் படத்தைத் தடைசெய்யக் கோரி தந்திகள் பறந்தவண்ணம் உள்ளன.ஆனால் அண்ணி சங்கீதாவுக்கு இந்த எதிர்ப்புகள் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளன.இந்தப் படத்தில் அருந்ததியை (சங்கீதா நடித்த கேரக்டரின் பெயர்) நல்ல பொண்ணாகநாங்கள் காட்டவில்லை.மோசமான பெண்ணாகத்தான் சித்தரித்துள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட பெண்ணுக்கு இதுதான் முடிவு என்றும் காட்டியுள்ளோம். நல்லகுணடைய பெண்ணாக அருந்ததியைக் காட்ட முயற்சிக்கவில்லை.அப்படி இருக்கையில், இந்த படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஏன்கூறுகிறார்கள் என்று புரியவில்லை. ஊரில் நடக்காததையா இதில் காட்டியுள்ளோம்?இல்லையே, சமீபத்தில் கூட சென்னையில் 2 கொடூரக் கொலைகள் நடந்தன.இரண்டுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்குத் தெரியும். அதில் ஒரு கொலையில்சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் சித்தி, மகன் முறை வருகிறவர்கள்.இருவரும் கள்ளக்காதலர்கள். இந்தக் காதலால்தான் அந்தப் பெண்ணின் கணவர்உயிரிழந்தார். இதை விடவா உயிர் படத்தில் காட்சிகளை வைத்து விட்டோம்? இப்படத்தில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை. கேரக்டர் குறித்து இயககுநர் சாமிசொன்னபோதே, கிளாமர் காட்ட மாட்டேன், உடம்பைக் காட்டி நடிக்க மாட்டேன்என்று கூறி விட்டேன்.அதன்படியேதான் நடித்தேன். எனவே இதை ஆபாசமான பாத்திரம் என்றும் கூறமுடியாது. வாலி படத்தில் அஜீத் நடிக்கவில்லையா? பிரகாஷ் ராஜ் ஆசை படத்தில்நடிக்கவில்லையா? அந்தப் படங்களில் எல்லாம் முறையற்ற உறவுகளைத்தானேகாட்டினார்கள்?.ஆண்கள் நடித்தால் பாராட்டு, பெண்கள் நடித்தால் வசவா? இதென்ன நியாயம்?நடிகர்கள் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதைப் போல நாங்களும் நடிக்கிறோம்.இதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.உயிர் படம் நிச்சயம் வெற்றி பெறும். இதேபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள்எனக்குக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பொருமித் தள்ளி விட்டார் சங்கீதா.நிஜத்தில் குண்டக்க மண்டக்க மேட்டர்கள் எல்லாம் அரங்கேறி அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சங்கீதாவின் புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான்செய்கிறது.

Subscribe to Oneindia Tamil
உயிர் படத்தில் கணவரின் தம்பியை அடையத் துடிக்கும் அண்ணி கேரக்டரில்நடித்துள்ள சங்கீதாவுக்கு, வசவுகளும், பாராட்டுக்களும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறதாம்.

ஸ்ரீகாந்த், ஷம்ருத்தா, சங்கீதா நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் சர்ச்சையில்சிக்கியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த்தின் அண்ணியாக வருகிறார் சங்கீதா. கொழுந்தன் என்றஉறவையும் மீறி, ஸ்ரீகாந்த் மீது காமம் கொள்கிறார்.

அவரை அடையத் துடிக்கிறார். அதற்கான காரியங்களிலும் ஈடுபடுகிறார். சங்கீதாவின்இந்த கேரக்டர், பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் கதாபாத்திரம் இது. இப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று பலர் கிளம்பியுள்ளனர். முதல்வர் கருணாநிதிக்கும் படத்தைத் தடைசெய்யக் கோரி தந்திகள் பறந்தவண்ணம் உள்ளன.

ஆனால் அண்ணி சங்கீதாவுக்கு இந்த எதிர்ப்புகள் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளன.இந்தப் படத்தில் அருந்ததியை (சங்கீதா நடித்த கேரக்டரின் பெயர்) நல்ல பொண்ணாகநாங்கள் காட்டவில்லை.

மோசமான பெண்ணாகத்தான் சித்தரித்துள்ளார் இயக்குநர்.

இப்படிப்பட்ட பெண்ணுக்கு இதுதான் முடிவு என்றும் காட்டியுள்ளோம். நல்லகுணடைய பெண்ணாக அருந்ததியைக் காட்ட முயற்சிக்கவில்லை.

அப்படி இருக்கையில், இந்த படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஏன்கூறுகிறார்கள் என்று புரியவில்லை. ஊரில் நடக்காததையா இதில் காட்டியுள்ளோம்?இல்லையே, சமீபத்தில் கூட சென்னையில் 2 கொடூரக் கொலைகள் நடந்தன.

இரண்டுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்குத் தெரியும். அதில் ஒரு கொலையில்சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் சித்தி, மகன் முறை வருகிறவர்கள்.

இருவரும் கள்ளக்காதலர்கள். இந்தக் காதலால்தான் அந்தப் பெண்ணின் கணவர்உயிரிழந்தார். இதை விடவா உயிர் படத்தில் காட்சிகளை வைத்து விட்டோம்?

இப்படத்தில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை. கேரக்டர் குறித்து இயககுநர் சாமிசொன்னபோதே, கிளாமர் காட்ட மாட்டேன், உடம்பைக் காட்டி நடிக்க மாட்டேன்என்று கூறி விட்டேன்.

அதன்படியேதான் நடித்தேன். எனவே இதை ஆபாசமான பாத்திரம் என்றும் கூறமுடியாது. வாலி படத்தில் அஜீத் நடிக்கவில்லையா? பிரகாஷ் ராஜ் ஆசை படத்தில்நடிக்கவில்லையா? அந்தப் படங்களில் எல்லாம் முறையற்ற உறவுகளைத்தானேகாட்டினார்கள்?.

ஆண்கள் நடித்தால் பாராட்டு, பெண்கள் நடித்தால் வசவா? இதென்ன நியாயம்?

நடிகர்கள் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதைப் போல நாங்களும் நடிக்கிறோம்.இதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உயிர் படம் நிச்சயம் வெற்றி பெறும். இதேபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள்எனக்குக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பொருமித் தள்ளி விட்டார் சங்கீதா.

நிஜத்தில் குண்டக்க மண்டக்க மேட்டர்கள் எல்லாம் அரங்கேறி அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சங்கீதாவின் புலம்பலிலும் ஒரு நியாயம் இருக்கத்தான்செய்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil