»   »  கலக்க வரும் காசு சங்கீதா!

கலக்க வரும் காசு சங்கீதா!

Subscribe to Oneindia Tamil

உயிர் படத்தில் கொழுந்தனுக்கு பிராக்கெட் போடும் தில்லாலங்கடி கேரக்டரில் நடித்து ரசிகர்களைதியேட்டர்களுக்கு இழுத்து விட்ட சங்கீதா அடுத்து காசு படத்திலும் வில்லங்கமான கேரக்டரில் நடிக்கிறார்.

ரசிகா என்ற பெயரில் ரொங்க வைக்கும் ரம்ய அழகுடன் சங்கீதா ஏகப்பட்ட படங்களில் நடித்தும் கூட ரசிகர்கள்மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் தொங்கலாகிக் கிடந்தார். ஆனால் உயிர் படம் வந்தாலும்வந்தது, சங்கீதாவுக்கு ரசிகர் வட்டாரம் பெருத்துப் போய் விட்டது.

திவாலான வங்கிக்கு ரிசர்வ் வங்கி திடீரென கோடிகளைக் கொட்டிக் கொடுத்து என்ஜாய் என்றால் எப்படிஇருக்கும்? அப்படித்தான் உள்ளது சங்கீதாவின் இன்றைய மார்க்கெட்டும். ஏகப்பட்ட படங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜமாய்க்கவுள்ளார்சங்கீதா.

அதில் ஒன்றுதான் காசு. இதில் படு தில்லான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் சங்கீதா. அதாவது காசுக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் பெண்ணாக வருகிறார் சங்கீதா. காசுக்காக எதை வேண்டுமானாலும் என்றவார்த்தையில் எல்லாமே அடங்கி விடுகிறதாம்.

உயிர் அருந்ததி போல, காசு சங்கீதாவின் கேரக்டரும் சற்றே விவகாரமானதுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.ஆனாலும், உயிர் படத்தைப் போலவே, இதிலும் ஆபாசம், விரசம் கலக்காமல் கதி கலங்க வைக்கப் போகிறாராம்சங்கீதா.

இப்படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கே சவால் விடும் வகையிலான சில காட்சிகளிலும் சங்கீதாவை துணிச்சலாகநடிக்க வைத்துள்ளாராம் இயக்குனர் கெளரி மனோகர். படத்தின் கான்செப்ட் என்ன என்று மனோகரிடம்கேட்டால், பணம்தான் எல்லாம் என்று நினைப்பவர்களுக்கு அது தவறு என்பதை புரிய வைக்கும் கதைதான் இந்தகாசு படத்தின் கதை.

இப்படத்தில் பணம்தான் முக்கியம், மற்ற எல்லாமே துச்சம் என்று நினைக்கும் பெண்ணாக சங்கீதா நடிக்கிறார்.கடைசியில் பணத்தை விட கலாச்சாரம், கெளரவம், மானம் தான் பெரியது என்று புரிய வருகிறது. திருந்துகிறார்.இது படிப்பினையூட்டும் கதை என்று பொறுப்பாக பதில் சொல்கிறார் மனோகர்.

பொறுப்பாக அறிவுரை செய்ய வந்தால் நம்ம ஆட்கள் நீ என்ன பெரிய பருப்பா என்று எகத்தாளமாககேட்பார்களே என்று மனோகரிடம் கேட்டால், நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்து விட்டுக் கேட்க மாட்டார்கள்.

காரணம் கேரக்டர்களை அப்படி வைத்துள்ளேன். நிச்சயம் வரவேற்பார்கள் என்கிறார் தைரியமாக. படம் முடிந்துவிட்டது. சீக்கிரம் ரிலீஸ் செய்கிறார்களாம்.

சங்கீதாவை மனதில் வைத்து கதையை உருவாக்கும் அளவுக்கு சங்கீதா வளர்ந்து விட்டார்.நல்ல முன்னேற்றம்தான்.

Read more about: sangeetha in kasu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil