»   »  தனம் சங்கீதா!

தனம் சங்கீதா!

Subscribe to Oneindia Tamil

அண்ணி அருந்ததியாக வந்து ரசிகர்களின் உயிரை உலுக்கிய ரசிகா என்ற சங்கீதா அடுத்து பூணப் போகும்அவதாரம் தனம்.

செல்லியம்மன் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம்தான் தனம். இதில் சங்கீதாவுக்கு முக்கியத்துவம் தரும்வகையில் கதையை அமைத்துள்ளனராம். சங்கீதாவுக்கு உயிர் படம் மூலம் கிடைத்துள்ள புதிய அங்கீகாரத்தைஅப்படியே பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட கதைதான் தனம்.

கொழுந்தனை அடைய போராடும் பெண்ணாக உயிர் படத்தில் வந்த சங்கீதா, தனம் படத்தில், சமூக சீர்கேடுகளைஎதிர்த்துப் போராடும் புரட்சிப் பெண்ணாக வருகிறாராம்.

வழக்கமாக ஹீரோவை புக் செய்து விட்டு ஹீரோயின் உள்ளிட்டவர்களை தேடுவதுதான் சினிமா உலகின்வழக்கம். ஆனால் தனம் படத்தைப் பொறுத்தவரை சங்கீதா மட்டுமே புக் ஆகியுள்ளாராம். மற்ற கலைஞர்களைஇனிமேல் தான் முடிவு செய்யப் போகிறார்களாம்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜீவா கேமரா, லெனின் எடிட்டிங், தோட்டாதரணிகலை என முக்கியமான தலைகள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதேஅதிகரித்துள்ளது. சிவா என்ற புதுமுகம்தான் படத்தை இயக்கப் போகிறார்.

சென்டிமென்ட், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக தனம் இருக்கும் என்கிறார் சிவா.

உயிர் படத்தைத் தொடர்ந்து அதே போன்ற கதையம்சத்துடன் சங்கீதாவைத் தேடி ஏகப்பட்ட படங்கள் வந்ததாம்.நல்ல சம்பளம் தருவதாக கூறினார்களாம். ஆனால் சங்கீதாதான் அத்தனை படத்தையும் நிராகரித்து விட்டாராம்.விட்டால் ஷகீலா ரேஞ்சுக்கு கூட்டிப் போய் விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.

இப்போது நடிக்கவுள்ள தனம், உயிர் படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த கெட்ட பெயரை போக்கி விடும் என்றநம்பிக்கையில் இருக்கிறார் சங்கீதா.

நல்லதும்மா...

Read more about: sangeethas new avatar dhanam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil