அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கும் சங்கவி!

By Siva

Sanghavi
நடிகை சங்கவிக்கும், அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கும் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கிறது.

அமராவதி படத்தில் தல அஜீத் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. அவர் இளைய தளபதி விஜயுடன் சேர்ந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை வரும் மார்ச் மாதம் 5ம் தேதி மணக்கிறார். அவர்களின் திருமணம் சென்னையில் நடக்கிறது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

என்ன சங்கவி உங்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாமே என்று கேட்டதற்கு, ஆம், திருமணம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் பதில் அளித்தார்.

சினிமாவில்தான் அமெரிக்க மாப்பிள்ளைகள் ஹீரோயின்களுக்குக் கிடைப்பார்கள். சங்கவிக்கு நிஜத்திலேயே கிடைத்து விட்டார், வாழ்த்துகள் சங்கவி...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X