»   »  சானியா நோ: சிம்புவுக்கு மூக்குடைப்பு ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள். சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.

சானியா நோ: சிம்புவுக்கு மூக்குடைப்பு ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள். சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.

இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.

அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.


இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.

இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.

சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.

சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.


இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.

அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.

சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.

சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள்.

சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.

Read more about: sania mirsa says no to simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil