சீரியல் பொண்டாட்டி செம்பாவின் நிஜ பிறந்தநாளுக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்திய கார்த்திக்
Recommended Video

சென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் செம்பாவுக்கு கார்த்திக் 23 பரிசுகள் கொடுத்து அசத்தியுள்ளார்.
ராஜா ராணி சீரியலுக்கு என்று தினாயக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. ஆலியா மானசா என்றால் கூட பலருக்கும் தெரியாது செம்பா என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
ராஜா ராணி செம்பாவாகத் தான் ஆலியாவை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

பிறந்தநாள்
கடந்த 27ம் தேதி ஆலியா தனது 23வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் அன்று ராஜா ராணி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசு
சீரியலில் செம்பாவின் கணவர் கார்த்திக்காக நடிப்பவர் சஞ்சீவ். தனது ரீல் மனைவியின் பிறந்தநாள் அன்று அவருக்கு 23 பரிசுகள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இன்பம்
தனது பிறந்தநாள் அன்று முழுவதும் சஞ்சீவிடம் இருந்து பரிசு கிடைத்துக் கொண்டே இருந்ததில் செம்பாவுக்கு செம மகிழ்ச்சி. இதையடுத்து தனது ரீல் கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காதலா?
23 பரிசுகள் கொடுத்திருக்கிறாரே அப்படி என்றால் சஞ்சீவ் ஆலியா மானசாவை காதலிக்கிறாரா என்று கேட்லாம். ஒரே சீரியலில் நடிக்கும் பாசத்தால் வாங்கி கொடுத்தாராம். ஆலியாவுக்கு தான் ஏற்கனவே ஆள் இருக்கே பாஸ்.


Click it and Unblock the Notifications











