»   »  குதூகலிக்கும் சரண்யா பாக்யராஜ் மகள் சரண்யாவின் நடிப்பை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.இதனால் சரண்யா வானத்துக்கும், பூமிக்குமாக சந்தோஷத்தில் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.ஆட்சிப் பணி, கட்சிப் பணி, கூட்டணிக் கட்சிகளை சமாளிக்கும் பணி என ஏகப்பட்டவேலைகளில் பிசியாக உள்ள கருணாநிதிக்கு, தனது மகள் சரண்யா நடித்துஅறிமுகமாகியுள்ள பாரிஜாதம் படத்தை விசேஷமாக போட்டுக் காண்பித்துள்ளார்பாக்யராஜ்.படத்தை முழுவதுமாப் பார்த்து ரசித்த கருணாநிதி, சரண்யாவைக் கூப்பிட்டுபாராட்டினாராம். இதை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்துப்போகிறார் சரண்யா.கலைஞரே என்னை வாயார பாராட்டி விட்டார். நன்றாக நடித்திருக்கிறாய் என்றுஅவரது பாராட்டு, எனக்கு விருது கிடைத்தது போல இருக்கிறது என்று சந்தோஷமாகசொல்லும் சரண்யா பாரிஜாதத்தில் தனது நடிப்பனுபவத்தை பரவசமாக பகிர்ந்துகொண்டார்.படத்தின் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட பின்னர், அப்பாவும், அம்மாவும்அதன் ரஷ் காட்சியைப் பார்த்து எனது நடிப்பில் தவறு இருக்கிறதா என்றுபார்ப்பார்கள். இருந்தால் சொல்லித் திருத்துவார்கள். இதனால்தான் ஒவ்வொருகாட்சியிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறோம்.இப்போது முதல்வேர பாராட்டி விட்டார். இதை விட வேறு என்ன வேணும் என்றுசந்தோஷமாக கேட்கிறார் சரண்யா.சரண்யா நடிக்க வருவதற்கு முன் தனது கல்லூரி நாட்களில் விடியல் என்றகுறும்படத்தை இயக்கியுள்ளாராம்.பணக்காரப் பெண் ஒருத்தி தவறான பாதையில் விழுகிறாள். தவறான பழக்கத்தால்குழந்தை உண்டாகிறது, அதை குப்பைத் தொட்டியில் போடுகிறாள். ஆனால் தாய்ப்பாசம் அவளை ஈர்க்க குப்பைத் தொட்டிக்கு ஓடுகிறாள். ஆனால் அங்கு குழந்தைஇல்லை. அதன் பிறகு அவள் தனது குழந்தையை அவள் மீண்டும் சந்திக்கிறாளாஎன்பதுதான் கதையாம்.இப்போது தான் சந்திக்கும் கோலிவுட்காரர்கள் அத்தனை பேரிடமும் விடியல் கதையைவிடியும் வரை பேசிக் கொண்டிருக்கிறார் சரண்யா.நடிப்பு சரிப்படாவிட்டால் இயக்குனராகி விடுவாராம்.பாரிஜாதம் குறித்த இன்னொரு மேட்டர். இப்படத்தை சன் டிவிக்கு செம துட்டுக்குஏற்கனவே விற்று விட்டாராம் பாக்யராஜ். படத்தை விற்று விட்டுத்தான் திமுகவில்போய்ச் சேர்ந்தாராம்.முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு தனது புதுப் படங்களை விசேஷமாக போட்டுக்காண்பிப்பார் பாக்யராஜ்.இப்போ தான் எல்லாம் மாறிப் போச்சே!

குதூகலிக்கும் சரண்யா பாக்யராஜ் மகள் சரண்யாவின் நடிப்பை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.இதனால் சரண்யா வானத்துக்கும், பூமிக்குமாக சந்தோஷத்தில் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.ஆட்சிப் பணி, கட்சிப் பணி, கூட்டணிக் கட்சிகளை சமாளிக்கும் பணி என ஏகப்பட்டவேலைகளில் பிசியாக உள்ள கருணாநிதிக்கு, தனது மகள் சரண்யா நடித்துஅறிமுகமாகியுள்ள பாரிஜாதம் படத்தை விசேஷமாக போட்டுக் காண்பித்துள்ளார்பாக்யராஜ்.படத்தை முழுவதுமாப் பார்த்து ரசித்த கருணாநிதி, சரண்யாவைக் கூப்பிட்டுபாராட்டினாராம். இதை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்துப்போகிறார் சரண்யா.கலைஞரே என்னை வாயார பாராட்டி விட்டார். நன்றாக நடித்திருக்கிறாய் என்றுஅவரது பாராட்டு, எனக்கு விருது கிடைத்தது போல இருக்கிறது என்று சந்தோஷமாகசொல்லும் சரண்யா பாரிஜாதத்தில் தனது நடிப்பனுபவத்தை பரவசமாக பகிர்ந்துகொண்டார்.படத்தின் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட பின்னர், அப்பாவும், அம்மாவும்அதன் ரஷ் காட்சியைப் பார்த்து எனது நடிப்பில் தவறு இருக்கிறதா என்றுபார்ப்பார்கள். இருந்தால் சொல்லித் திருத்துவார்கள். இதனால்தான் ஒவ்வொருகாட்சியிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறோம்.இப்போது முதல்வேர பாராட்டி விட்டார். இதை விட வேறு என்ன வேணும் என்றுசந்தோஷமாக கேட்கிறார் சரண்யா.சரண்யா நடிக்க வருவதற்கு முன் தனது கல்லூரி நாட்களில் விடியல் என்றகுறும்படத்தை இயக்கியுள்ளாராம்.பணக்காரப் பெண் ஒருத்தி தவறான பாதையில் விழுகிறாள். தவறான பழக்கத்தால்குழந்தை உண்டாகிறது, அதை குப்பைத் தொட்டியில் போடுகிறாள். ஆனால் தாய்ப்பாசம் அவளை ஈர்க்க குப்பைத் தொட்டிக்கு ஓடுகிறாள். ஆனால் அங்கு குழந்தைஇல்லை. அதன் பிறகு அவள் தனது குழந்தையை அவள் மீண்டும் சந்திக்கிறாளாஎன்பதுதான் கதையாம்.இப்போது தான் சந்திக்கும் கோலிவுட்காரர்கள் அத்தனை பேரிடமும் விடியல் கதையைவிடியும் வரை பேசிக் கொண்டிருக்கிறார் சரண்யா.நடிப்பு சரிப்படாவிட்டால் இயக்குனராகி விடுவாராம்.பாரிஜாதம் குறித்த இன்னொரு மேட்டர். இப்படத்தை சன் டிவிக்கு செம துட்டுக்குஏற்கனவே விற்று விட்டாராம் பாக்யராஜ். படத்தை விற்று விட்டுத்தான் திமுகவில்போய்ச் சேர்ந்தாராம்.முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு தனது புதுப் படங்களை விசேஷமாக போட்டுக்காண்பிப்பார் பாக்யராஜ்.இப்போ தான் எல்லாம் மாறிப் போச்சே!

Subscribe to Oneindia Tamil

பாக்யராஜ் மகள் சரண்யாவின் நடிப்பை முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.இதனால் சரண்யா வானத்துக்கும், பூமிக்குமாக சந்தோஷத்தில் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.

ஆட்சிப் பணி, கட்சிப் பணி, கூட்டணிக் கட்சிகளை சமாளிக்கும் பணி என ஏகப்பட்டவேலைகளில் பிசியாக உள்ள கருணாநிதிக்கு, தனது மகள் சரண்யா நடித்துஅறிமுகமாகியுள்ள பாரிஜாதம் படத்தை விசேஷமாக போட்டுக் காண்பித்துள்ளார்பாக்யராஜ்.

படத்தை முழுவதுமாப் பார்த்து ரசித்த கருணாநிதி, சரண்யாவைக் கூப்பிட்டுபாராட்டினாராம். இதை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்துப்போகிறார் சரண்யா.

கலைஞரே என்னை வாயார பாராட்டி விட்டார். நன்றாக நடித்திருக்கிறாய் என்றுஅவரது பாராட்டு, எனக்கு விருது கிடைத்தது போல இருக்கிறது என்று சந்தோஷமாகசொல்லும் சரண்யா பாரிஜாதத்தில் தனது நடிப்பனுபவத்தை பரவசமாக பகிர்ந்துகொண்டார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட பின்னர், அப்பாவும், அம்மாவும்அதன் ரஷ் காட்சியைப் பார்த்து எனது நடிப்பில் தவறு இருக்கிறதா என்றுபார்ப்பார்கள். இருந்தால் சொல்லித் திருத்துவார்கள். இதனால்தான் ஒவ்வொருகாட்சியிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.

படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறோம்.இப்போது முதல்வேர பாராட்டி விட்டார். இதை விட வேறு என்ன வேணும் என்றுசந்தோஷமாக கேட்கிறார் சரண்யா.

சரண்யா நடிக்க வருவதற்கு முன் தனது கல்லூரி நாட்களில் விடியல் என்றகுறும்படத்தை இயக்கியுள்ளாராம்.

பணக்காரப் பெண் ஒருத்தி தவறான பாதையில் விழுகிறாள். தவறான பழக்கத்தால்குழந்தை உண்டாகிறது, அதை குப்பைத் தொட்டியில் போடுகிறாள். ஆனால் தாய்ப்பாசம் அவளை ஈர்க்க குப்பைத் தொட்டிக்கு ஓடுகிறாள். ஆனால் அங்கு குழந்தைஇல்லை. அதன் பிறகு அவள் தனது குழந்தையை அவள் மீண்டும் சந்திக்கிறாளாஎன்பதுதான் கதையாம்.

இப்போது தான் சந்திக்கும் கோலிவுட்காரர்கள் அத்தனை பேரிடமும் விடியல் கதையைவிடியும் வரை பேசிக் கொண்டிருக்கிறார் சரண்யா.

நடிப்பு சரிப்படாவிட்டால் இயக்குனராகி விடுவாராம்.

பாரிஜாதம் குறித்த இன்னொரு மேட்டர். இப்படத்தை சன் டிவிக்கு செம துட்டுக்குஏற்கனவே விற்று விட்டாராம் பாக்யராஜ். படத்தை விற்று விட்டுத்தான் திமுகவில்போய்ச் சேர்ந்தாராம்.

முன்பெல்லாம் எம்.ஜி.ஆருக்கு தனது புதுப் படங்களை விசேஷமாக போட்டுக்காண்பிப்பார் பாக்யராஜ்.

இப்போ தான் எல்லாம் மாறிப் போச்சே!


Read more about: karunanidhi praises charanya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil