twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரத்குமாரின் ஏட்டிக்குப் போட்டி! விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் அதே நாளில், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் விதமாக செப்டம்பர் 14ம்தேதியன்று தனது 100வது படம் குறித்த அறிவிப்பை சென்னையில் பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார் சரத்குமார்.கண் சிமிட்டும் நேரம் படத்தைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியவர் சரத்குமார். அப்படத்தில் இன்ஸ்பெக்டர்கேரக்டரில் நடித்தும் இருப்பார். இதுதான் அவரது முதல் படம். அதன் பிறகு வில்லன் கேரக்டர்களில் நிறையப் படங்களில்நடித்துள்ள சரத்குமாருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது புலன் விசாரணை.புலன் விசாரணைப் படத்தின் மூலம் விஜயகாந்த்துக்கு நெருக்கிய நண்பரானார் சரத். இதைத் தொடர்ந்து தனது படங்களில்சரத்குமாருக்கு வெயிட்டான கேரக்டர்களை வாங்கிக் கொடுத்து சரத்தை வளர்த்து விட்டார் விஜயகாந்த்.கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த்துக்கு இணையான ரோலில் வந்தார் சரத்குமார். வில்லனாக ஜெயித்த சரத்குமார்படிப்படியாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன் பின்னர் அவரது வளர்ச்சி படு வேகமாக இருந்தது. இன்று, தமிழ் திரைப்படநாயகர்களில் முக்கியமானவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அந்தஸ்திலும் இருக்கிறார் சரத்குமார்.திமுகவின் முக்கிய நட்சத்திர நடிகராகவும் உள்ள சரத், ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ளார். குறுகிய காலத்தில், தனது கடும்உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் வேகமான வளர்ச்சியைக் கண்ட சரத்குமார் 99 படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து100வது படத்தில் நடிக்கப் போகிறார்.தனது 100வது படம் குறித்த அறிவிப்பை வருகிற 14ம் தேதி செனனையில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் அறிவிக்கிறார்சரத். செப்டம்பர் 14ம் தேதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு அரசியல் ரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் பல காரணங்கள்கூறப்படுகின்றன.ஆரம்பத்தில் விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சரத்குமார், சமீப ஆண்டுகளாக அவருடன் பல்வேறுவிஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக திரையுலகினர் நெய்வேலியில் நடத்தியபோராட்டத்திலிருந்துதான் விஜயகாந்த், சரத் இடையே பூசல் வெடித்தது என்கிறார்கள்.அந்த போராட்டத்தை தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சி போல விஜயகாந்த் மாற்றி விட்டார் என்ற அதிருப்தி சரத்குமாரிடம் உள்ளது.இதைத் தொடர்ந்துதான் ரஜினிகாந்த் அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது சரத்குமார் அவர் கூடவேஅமர்ந்து ரஜினியின் அறிக்கையையும் வாசித்து ரஜினி பக்கம் திரையுலகம் இருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தினார்.இப்படியாக உருவான பூசல் சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது வெடித்து வந்தது. இது சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம்எடுத்தது. நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் பாணி தனக்கு ஒத்துவரவில்லை என்று கூறிய சரத்குமார் பொதுச் செயலாளர்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் பல்வேறு மூத்த நடிகர்கள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி பிரச்சினையை சரிக்கட்டினர். இருப்பினும்,விஜயகாந்த்துக்கும், சரத்துக்கும் இடையிலான பூசல் இன்னும் நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது.சமீபத்தில் தங்கர்பச்சான் விவகாரத்தில் கூட விஜயகாந்த் வற்புறுத்தித்தான் அவர் எடுத்த முடிவுகளுக்கு சரத்குமார் ஒத்துப்போனதாக கூறப்படுகிறது. முன்பு போல இல்லாமல், முழு மனதுடன் சரத்குமார் தற்போது எதையும் செய்வதில்லை என்கிறார்கள்.இந்தச் சூழ்நிலையில்தான் வருகிற 14ம் தேதி விஜயகாந்த் தனது புதிய கட்சியை மதுரையில் தொடங்குகிறார். அதே தினத்தில்தனது 100வது பட அறிவிப்பை சென்னையில் வெளியிடுகிறார் சரத்குமார்.இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப அவர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. சாதாரண பட அறிவிப்பைபிரமாண்ட விழா போல சரத்குமார் ஏற்பாடு செய்திருப்பது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.விஜயகாந்த்தை சமாளிக்க சரத்குமார் என்ற அஸ்திரத்தை திமுக பயன்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கும் வலுவூட்டுவதாக இதுஅமைந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    By Staff
    |

    விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் அதே நாளில், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் விதமாக செப்டம்பர் 14ம்தேதியன்று தனது 100வது படம் குறித்த அறிவிப்பை சென்னையில் பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார் சரத்குமார்.

    கண் சிமிட்டும் நேரம் படத்தைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியவர் சரத்குமார். அப்படத்தில் இன்ஸ்பெக்டர்கேரக்டரில் நடித்தும் இருப்பார். இதுதான் அவரது முதல் படம். அதன் பிறகு வில்லன் கேரக்டர்களில் நிறையப் படங்களில்நடித்துள்ள சரத்குமாருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது புலன் விசாரணை.


    புலன் விசாரணைப் படத்தின் மூலம் விஜயகாந்த்துக்கு நெருக்கிய நண்பரானார் சரத். இதைத் தொடர்ந்து தனது படங்களில்சரத்குமாருக்கு வெயிட்டான கேரக்டர்களை வாங்கிக் கொடுத்து சரத்தை வளர்த்து விட்டார் விஜயகாந்த்.

    கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த்துக்கு இணையான ரோலில் வந்தார் சரத்குமார். வில்லனாக ஜெயித்த சரத்குமார்படிப்படியாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன் பின்னர் அவரது வளர்ச்சி படு வேகமாக இருந்தது. இன்று, தமிழ் திரைப்படநாயகர்களில் முக்கியமானவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அந்தஸ்திலும் இருக்கிறார் சரத்குமார்.

    திமுகவின் முக்கிய நட்சத்திர நடிகராகவும் உள்ள சரத், ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ளார். குறுகிய காலத்தில், தனது கடும்உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் வேகமான வளர்ச்சியைக் கண்ட சரத்குமார் 99 படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து100வது படத்தில் நடிக்கப் போகிறார்.

    தனது 100வது படம் குறித்த அறிவிப்பை வருகிற 14ம் தேதி செனனையில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் அறிவிக்கிறார்சரத். செப்டம்பர் 14ம் தேதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு அரசியல் ரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் பல காரணங்கள்கூறப்படுகின்றன.

    ஆரம்பத்தில் விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சரத்குமார், சமீப ஆண்டுகளாக அவருடன் பல்வேறுவிஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக திரையுலகினர் நெய்வேலியில் நடத்தியபோராட்டத்திலிருந்துதான் விஜயகாந்த், சரத் இடையே பூசல் வெடித்தது என்கிறார்கள்.


    அந்த போராட்டத்தை தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சி போல விஜயகாந்த் மாற்றி விட்டார் என்ற அதிருப்தி சரத்குமாரிடம் உள்ளது.இதைத் தொடர்ந்துதான் ரஜினிகாந்த் அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது சரத்குமார் அவர் கூடவேஅமர்ந்து ரஜினியின் அறிக்கையையும் வாசித்து ரஜினி பக்கம் திரையுலகம் இருப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தினார்.

    இப்படியாக உருவான பூசல் சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது வெடித்து வந்தது. இது சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம்எடுத்தது. நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் பாணி தனக்கு ஒத்துவரவில்லை என்று கூறிய சரத்குமார் பொதுச் செயலாளர்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.


    பின்னர் பல்வேறு மூத்த நடிகர்கள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி பிரச்சினையை சரிக்கட்டினர். இருப்பினும்,விஜயகாந்த்துக்கும், சரத்துக்கும் இடையிலான பூசல் இன்னும் நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது.

    சமீபத்தில் தங்கர்பச்சான் விவகாரத்தில் கூட விஜயகாந்த் வற்புறுத்தித்தான் அவர் எடுத்த முடிவுகளுக்கு சரத்குமார் ஒத்துப்போனதாக கூறப்படுகிறது. முன்பு போல இல்லாமல், முழு மனதுடன் சரத்குமார் தற்போது எதையும் செய்வதில்லை என்கிறார்கள்.

    இந்தச் சூழ்நிலையில்தான் வருகிற 14ம் தேதி விஜயகாந்த் தனது புதிய கட்சியை மதுரையில் தொடங்குகிறார். அதே தினத்தில்தனது 100வது பட அறிவிப்பை சென்னையில் வெளியிடுகிறார் சரத்குமார்.

    இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப அவர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. சாதாரண பட அறிவிப்பைபிரமாண்ட விழா போல சரத்குமார் ஏற்பாடு செய்திருப்பது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    விஜயகாந்த்தை சமாளிக்க சரத்குமார் என்ற அஸ்திரத்தை திமுக பயன்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கும் வலுவூட்டுவதாக இதுஅமைந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X