»   »  மீண்டும் சரிகா

மீண்டும் சரிகா

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனை விட்டுப் பிரிந்து மும்பைக்குச் சென்று விட்ட சரிகா அங்கு 2 படங்களில் நடித்து முடித்து விட்டுபாலிவுட்டில் அலையை ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்காக இப்போது சென்னைக்குவந்துள்ளார்.

கமல்ஹாசனை மணந்து, 2 பெண் குழந்தைகளுக்கும் தாயான சரிகா, அம்சமான இல்லத்தரசியாக மாறிப் போனார்.மும்பை பெண்ணான சரிகாவுக்கு, கமலின் மனைவியாக, சென்னைவாசியாக இருந்தது மிகவும் செளகரியமானமாற்றமாகவே இருந்தது.

திஆனால் அவரது வாழ்க்கையில் புயல் வீச, கமலையும், குழந்தைகளையும் பிரிந்து மும்பைக்குக்குத் திரும்பினார்.அதன் பிறகு அவர் சென்னைக்கு வரவில்லை. திடீரென தமிழ் படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு ஆடி பரபரப்பைஏற்படுத்தினார்.

அதன் பின்னர் அவர் சென்னைக்கு வரவே இல்லை. ஆனால் பாலிவுட்டில் அவர் மீண்டும் நடிப்புக் களத்தில்குதித்தார். பர்ஸானியா மற்றும் சேக்ரட் எவில் என இரு படங்களில் நடித்த சரிகா, அப்படங்களின் மூலம் மீண்டும்பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சரிகா. மன வளர்ச்சி குன்றிய பெண் வேடத்தில் சரிகாநடிக்கவுள்ளார். இது ஒரு நிஜப் பெண்ணின் கதையாம். சென்னையில் உள்ள தி பான்யன் என்ற மன வளம்குன்றியோருக்கான இல்லத்தில் இப்பெண் வசிக்கிறார்.

அப்பெண்ணின் வேடத்தில்தான் சரிகா நடிக்கவுள்ளார். தனது புதிய படம் குறித்து சரிகா மிகவும் ஆர்வமாகபேசுகிறார். இந்தப் பெண்ணை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். இந்தப் படத்தை 3 ஆண்டுகளுக்குமுன்பே நான் செய்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக நான் மும்பைக்கு போக வேண்டிய நிலைஏற்பட்டதால் நடிக்க முடியாமல் போனது.

இப்போது அப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டுள்ளேன். மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தசமூகத்தில் மிகப் பெரிய கவனிப்பும், பரிவும் இல்லாத நிலை உள்ளது. இதைத்தான் இந்தப் படத்தில்சொல்லவுள்ளனர். அத்தோடு இதுபோன்றவர்கள் மீது பரிவு காட்டுவதை விட அவர்களை சுயமாக சிந்திக்க,அன்றாட செயல்களில் அவர்களும் வழக்கம் போல ஈடுபட ஊக்கம் தர வேண்டும் என்பதை அழுத்தமாகசொல்லவுள்ளனர் என்கிறார் சரிகா.

பர்ஸானியா படத்தில் சரிகாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. இப்படத்திற்காக சரிகாவுக்கு தேசிய விருதும்கிடைத்தது. இதுகுறித்து சரிகாவிடம் கேட்டால், குஜராத் கலவரத்தில் தனது குழந்தையை தொலைத்த தாயின்வேடத்தில் அப்படத்தில் நான் நடித்துள்ளேன்.

இது மிகவும் உணர்ச்சிகரமான படம். நான் மிகவும் ஒன்றிப் போய் நடித்த கேரக்டர் இது. இதை நான் விரும்பிஏற்று செய்தேன். இப்படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதுவே எனக்கு பெரிய விருதுதான். தேசியவிருது கூடுதல் சந்தோஷம் என்கிறார் சரிகா.

மீண்டும் மும்பைவாசியாகி விட்ட சரிகா, பார்ட்டிகளுக்கு செல்வதில்லையாம். அதை விட பயணம் செய்வதேஅவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளதாம். பஸ்ஸிலும், ரயிலிலும், ஆட்டோவிலும், படகிலும் கூடஅவர் பயணம் செய்யத் தவறுவதில்லையாம்.

இத்தனை காலமாக பார்க்காத இந்தியாவை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இதைத் தவிர்த்துபுத்தகங்கள் படிப்பது சரிகாவின் இன்னொரு முக்கிய பொழுதுபோக்கு. இப்போதெல்லாம் நிறையப்படிக்கிறாராம்.

இதை விட சரிகாவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இசை. தினசரி காலை எழுந்தது முதல் படுக்கப் போவது வரைஇசையுடன்தான் இருக்கிறார் சரிகா. எந்த வகை இசையானாலும் சரிகாவுக்கு ஓ.கே.தானாம். இசைஞானிஇளையராஜாவின் தீவிர ரசிகையாகவும் இருக்கிறார் சரிகா.

ராஜாவின் இசையைக் கேட்டால் நமது மனம் சாந்தமடைகிறது. அவரது ஆரம்ப கால பாடல்களை நான் மிகவும்லயித்துப் போய் கேட்பேன். அவற்றை கேட்டால் நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கிறது. மிகப் பெரிய இசைக் கலைஞர்அவர் என்று மெய் மறக்கிறார் சரிகா.

நல்ல ரோல் கொடுத்தால் தமிழிலும் நடிக்கத் தயார் என்கிறார் சரிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil