»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சரிகா பெயல் ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளாராம் கமல். அதனால்தான் விவாகரத்துக்கு சரிகா சம்மதம்தரவில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். கடனை அடைப்பது குறித்து உறுதியான பதில் தந்தால்தான் விவாகரத்துஎன்பதில் உறுதியாக இருக்கிறாராம் சரிகா.

ஏழுமலை ஷூட்டிங்கிற்கு சிம்ரன் சரியாக வருவதில்லையாம். இப்போது பஞ்ச தந்திரம் படத்திற்காக கமலுடன்வெளிநாட்டுக்குப் பறந்து விட்டார். ஏழுமலை யூனிட் காத்துக் கொண்டுள்ளது. கமலைப் பகைத்துக் கொள்ளநேரிடுமே என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காக்கிறாராம் நடிகர் + படத்தின் டைரக்டர் அர்ஜூன்.

பாய்ஸ் படத்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் டைரக்டர் ஷங்கர்.

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் அவரது அப்பா மம்பட்டியான் தியாகராஜனும் நடிக்கிறார். படத்திலும் அப்பாவேடமாம். அவருக்கு ஜோடியாக ஹேமமாலினி நடிக்கவுள்ளார்.

இன்னொரு சினிமா ஹேமமாலினி பற்றியும் ஒரு நியூஸ். இந்த ஹேமமாலினி பிரபல டப்பிங் கலைஞர். இவர் மீனா, அம்பிகா,நதியா, டிஸ்கோ சாந்தி, கமலா காமேஷ்(!!!) என எண்ணற்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்திருந்தாலும் அதிகபட்சமாகடப்பிங் கொடுத்தது சில்க் ஸ்மிதாவுக்குத்தானாம்.

இவர் இப்போது சென்னை டப்பிங் பயிற்சி பள்ளியை ஆரம்பித்துள்ளார்என்பது தான் நியூஸ். இங்கு குழந்தைகள் முதல் பெயவர்கள் வரை அனைவருக்கும் டப்பிங்கில் பயிற்சி தரப்படுமாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil