»   »  செல்வியிலிருந்து விலகினார் சரிதா

செல்வியிலிருந்து விலகினார் சரிதா

Subscribe to Oneindia Tamil

ராதிகாவின் செல்வி தொடரிலிருந்து சரிதா விலகி விட்டார்.

ராதிகாவின் ரேடான் நிறுவனம் சன் டிவியில் செல்வி என்ற தொடரை ஒளிபரப்பி வருகிறது. இதில் சரிதாவும்,ராதிகாவும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே சரிதாவின் கேரக்டரைஅப்பாவித்தனமான, வெகுளித்தனமான, நல்ல கேரக்டராக காட்டி வந்தனர்.

ஆனால் தற்போது சரிதா கேரக்டரை வில்லியாக மாற்றி விட்டார்கள். ஆனால் இதை ஏற்காத சரிதா தற்போதுதொடரிலிருந்து விலகி விட்டாராம். இதுகுறித்து சரிதா கூறுகையில், எனது கேரக்டர் பாசிட்டிவ்வான கேரக்டர்என்றுதான் ஆரம்பத்திலேயே கூறினார்கள். திரைக்கதையிலும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் திரைக்கதையின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. நான் நடித்து வரும் தாமரை கேரக்டர் நெகட்டிவாகமாறி வருகிறது. இதை நான் விரும்பவில்லை. வில்லியாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவேதொடரிலிருந்து விலக முடிவு செய்தேன்.

திரைக்கதையை முடிவு செய்ய வேண்டியது இயக்குநரின் உரிமை. அதை நான் தடுக்கவோ, குறுக்கிடவோமுடியாது. ஆனால் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை எனக்கு உள்ளது.எனவேதான் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாமல் விலகி விட்டேன் என்றார் சரிதா.

சரிதாவின் விலகலை தயாரிப்பாளரும், தொடரின் முக்கிய பாத்திரமான ராதிகா சாதாரணமகத்தான் எடுத்துக்கொண்டுள்ளார். சரிதாவின் விலகல் குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சுமூகமான விலகல்தான். இதைநாங்கள் சமாளிப்போம் என்றார் ராதிகா.

தொடரிலிருந்து விலகி விட்ட சரிதா தற்போது கொச்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தோடு ஓய்வாகஉள்ளாராம். சில வார இடைவெளிக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பது குறித்து முடிவெடுக்கப்போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil