அடியாத்தீ... அப்படியே இருக்கிறாரே ச'ரோஸ்' தேவி... !

By Sudha

சென்னை: தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்ந்தேன். ரொம்ப வேகமாக ஓடிப் போய் ரீவைண்ட் பாருங்கள்.... ஸ்டாப் ஸ்டாப்.. சரோஜாதேவியைப் பார்த்தீங்களா... அப்படியே பார்வார்ட் வாங்க... ஆ... அன்னைக்குப் பார்த்தது மாதிரியே இப்போதும் இருக்கிறாரப்பா... சரோஜோ தேவி.

அன்று வந்ததும் இதே நிலா.. இன்று வந்ததும் அதே நிலா.. கதையாக இருக்கிறது சரோஜா தேவியின் அழகுக் கதை...

எப்படி இப்படி .. இப்படியெல்லாம் எப்படி... என்று எத்தனை படிகள் ஏறிப் போய்க் கேட்டாலும் சரோஜாவிடம் புன்னகைதான் பதிலாகக் கிடைக்கும் போல.. அந்தப் புன்னகை என்ன விலை என்று கேட்டால் அதற்கும் பெரும் புன்னகையைதான் பரிசாக தருகிறார் தேவி...

செக்கச் செவேல் அழகு

செக்கச் செவேல் அழகு

இயல்பிலேயே சரோஜா தேவி செம அழகுதான். அதிலும் அந்தக் கொள்ளைச் சிரிப்புக்குப் போட்டியாக அவரிடம் கொட்டிக் கிடக்கிறது செக்கச் சிவந்த அழகு.. இல்லாவிட்டால் எஸ்.எம்.கிருஷ்ணா ஸ்லிப் ஆகாமல் எஸ்கேப் ஆகியிருப்பாரே...

கன்னடத்துக் கலர் பைங்கிளி

கன்னடத்துக் கலர் பைங்கிளி

கன்னடத்துப் பைங்கிளி என்று யாரோ தப்பாகச் சொல்லி விட்டார்கள் சரோஜாதேவியை.. உண்மையில் கன்னடத்துக் கலர் பைங்கிளி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.. கிளி பச்சை.. ஆனால் இந்த பைங்கிளியோ பளீர் கலராச்சே...

அப்படியே இன்னும்

அப்படியே இன்னும்

தியாகராஜன் பிறந்த நாளுக்கு சென்னை வந்திருந்த சரோஜாதேவி தியாகராஜனை வாழ்த்தி ஆசிர்வதித்தார். தியாகராஜனைப் பார்த்தவர்களை விட தேவியைப் பார்த்தவர்களே எக்கச்சக்கம்.

அழகே ஒரு ஆனந்தம்தானே...!

அழகே ஒரு ஆனந்தம்தானே...!

அழகு பார்த்து ரசிப்பதற்கு மட்டுமல்ல.. மனதில் ஆனந்தத்தை நிரப்புவதற்கும். நிச்சயம் சரோஜாதேவியின் அழகு அவரது மனதின் பரிபூரண சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

.........யாருப்பா அங்க, ரீவைண்ட் பண்ணி தொட்டால் பூ மலரும் போடேன்ப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X