கேள்க்காத சப்தம்
வசந்த் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள சத்தம் போடாதே படம் மலையாளத்தில் கேள்க்காத சப்தம் என்ற பெயரில் டப் ஆகியுள்ளது.
வசந்த் இயக்கத்தில் பிருத்விராஜ், பத்மப்ரியா ஆகியோர் நடித்துள்ள சத்தம் போடாதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாசரும் முக்கிய வேடம் பூண்டு நடித்துள்ளார்.இது ஒரு குடும்பப் படம். அதேசமயம், திரில்லரும் கூட என்று வசந்த் கூறியுள்ளார். புதுசாக கல்யாணம் கட்டிக் கொண்டு வரும் பெண், அந்தக் குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைச் சம்பவங்களை சந்திக்கிறார், அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.
இப்போது இப்படத்தை மலையாளத்துக்கும் கொண்டு போயுள்ளார் வசந்த். மலையாளத்தில் கபூர் மனலோடி, உமாதேவி ஆகியோர் திவ்யா பிலிம்ஸுக்காக தயாரித்துள்ளனர்.
மலையாளத்துக்குப் போகும் முதலாவது யுவன் ஷங்கர் ராஜா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இசைஞானி மலையாளத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இப்போது தந்தை வழியில் மகனும் மலையாளத்தைக் கலக்கப் போகிறார்.
கேள்க்காத சப்தத்திற்காக பிரபல பாடலாசிரியர் கிரீஷ் புட்டஞ்சேரி 6 பாடல்களை எழுதியுள்ளார். இவர் இசைஞானிக்கும் ராசியான பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மொழிகளிலும் இப்படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் வசந்த்.


Click it and Unblock the Notifications











