சத்தம் போடாதே - 'யு'
இயக்குநர் வசந்த்தின் சத்தம் போடாதே படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளது சென்சார் போர்டு.
நேருக்கு நேர், ஆசை, பூவெல்லாம் கேட்டுப் பார் என பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் வசந்த். தற்போது சத்தம் போடாதே என்ற ரொமான்டிக் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.
பிருத்விராஜ், பத்மப்ரியா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மொழி படத்துக்குப் பின்னர் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்த 2வது தமிழ்ப் படம் சத்தம் போடாதே.
திரில்லர் படமாக இருந்தாலும் ரொமான்ஸுக்குப் பஞ்சம் இல்லாத வகையில் படம் உருவாகியுள்ளதாக வசந்த் கூறியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது. இந்த நிலையில் படத்துக்கு சென்சார் போர்டு, யு சான்றிதழ் கொடுத்துள்ளது. செப்டம்பர் 14ம் தேதி படம் ரிலீஸாகிறதாம்.
மலையாளத்திலும் இப்படம் கேள்க்காத சப்தம் என்ற பெயரில் அதே நாளில் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications