நடிகர்கள் பின்னால் ஓடாதீர்கள்: சத்யராஜ் அட்வைஸ் ஒரு படம் ஓடியவுடனேயே, அந்த நடிகரின் பின்னால் பணப் பெட்டியுடன் அலைவதை தயாரிப்பாளர்கள் முதலில் நிறுத்தவேண்டும் என்று மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார்.அர்ஜூன், நமீதா நடித்துள்ள ஆணை படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சத்யராஜ்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சின்போது, நடிகர், நடிகையரை மறைமுகமாகத் தாக்கினார்.நான் நடித்த இங்கிலீஷ்காரன் படம் நன்றாக ஓடிக் கொண்டுள்ளது. இதையடுத்து என்னைத் தேடி பல தயாரிப்பாளர்கள்வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. நானே விரும்பினாலும் கூட 2007க்குப் பிறகுதான் நடிக்ககால்ஷீட் கொடுக்க முடியும்.ஆனாலும் தயாரிப்பாளர்கள் விடுவதில்லை. முதலில் பணத்தை பிடியுங்கள், 2007ல் நடித்துக் கொடுங்கள் என்கின்றனர்.2007ல் நான் எப்படியிருப்பேன், எனக்கு மார்க்கெட் இருக்குமா, இருக்காதா, கதை என்ன என்று எதுவுமே யோசிக்காமல்,அட்வான்ஸைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் துடிக்கின்றனர். இங்கேதான் தயாரிப்பாளர்கள் தவறு செய்கிறார்கள்.ஒரு படம் ஓடிவிட்டால் அந்த நடிகன் பின்னால் அலைய வேண்டுமா?சூப்பர் ஸ்டாரான ரஜினியே நல்ல கதையுடன் கூடிய படத்தில் நடித்தால்தான் வெற்றி பெற முடிகிறது. பாபா படம் ஓடவில்லை,காரணம் கதை சரியில்லை, ஆனால் சந்திரமுகி பிய்த்து வாங்குகிறது, காரணம் கதை.ஹீரோக்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குறை கூறுவதில் நியாயம் இல்லை. காரணம் இவர்கள்தானேஒரு நடிகரை சூப்பர் நடிகராக்குகிகறார்கள். ஒரு படம் ஓடி விட்டால், உடனேயே அந்த நடிகரின் பின்னால் பணப் பெட்டியுடன்அலைகிறார்கள். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து அந்த நடிகரை பெரிய ஆளாக்கி விடுகிறார்கள்.அப்படிப் பெரிய ஆளாக மாறிய நடிகர்கள், பின்னால் சம்பளத்தைக் குறைக்க வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.எனவே நடிகர்களின் பின்னால் அலைவதை தயாரிப்பாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். நடிகர்களை தேவையில்லாமல்வளர்த்து விடக் கூடாது.நான் ஆரம்பத்தில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். பிறகு குறைத்து விட்டேன். இப்போது எனது சம்பளம் எவ்வளவுகுறைந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். எனது மன நிலை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும், வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதை உருவாக்க வேண்டியது தயாரிப்பாளர்கள்தான் என்று உண்மைகளைப் போட்டு உடைத்தார் சத்யராஜ்.முன்னதாக இங்கிலீஷ்காரன் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ். சீனிவாசன் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். பல சிரமங்களை சந்தித்தேன். சில நண்பர்களின்உதவியால்தான் தப்பிப் பிழைத்தேன் என்று அவர் அழுதபடி கூறியபோது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரின் முகங்களிலும்சோகம் அப்பிக் கொண்டது.விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜனும், நடிகர், நடிகைகளை ஒரு பிடி பிடித்தார். தயாரிப்பாளர்கள் இல்லாவிட்டால் ஒருநடிகருகம் கிடையாது, நடிகையும் கிடையாது. தயாரிப்பாளரை அழ வைக்கும் நடிகர், நடிகைகளை சினிமாவில் இருந்தேவிரட்டியடிக்க வேண்டும் என்றார்.

By Staff

ஒரு படம் ஓடியவுடனேயே, அந்த நடிகரின் பின்னால் பணப் பெட்டியுடன் அலைவதை தயாரிப்பாளர்கள் முதலில் நிறுத்தவேண்டும் என்று மகா நடிகன் சத்யராஜ் கூறியுள்ளார்.

அர்ஜூன், நமீதா நடித்துள்ள ஆணை படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சத்யராஜ்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சின்போது, நடிகர், நடிகையரை மறைமுகமாகத் தாக்கினார்.

நான் நடித்த இங்கிலீஷ்காரன் படம் நன்றாக ஓடிக் கொண்டுள்ளது. இதையடுத்து என்னைத் தேடி பல தயாரிப்பாளர்கள்வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. நானே விரும்பினாலும் கூட 2007க்குப் பிறகுதான் நடிக்ககால்ஷீட் கொடுக்க முடியும்.

ஆனாலும் தயாரிப்பாளர்கள் விடுவதில்லை. முதலில் பணத்தை பிடியுங்கள், 2007ல் நடித்துக் கொடுங்கள் என்கின்றனர்.

2007ல் நான் எப்படியிருப்பேன், எனக்கு மார்க்கெட் இருக்குமா, இருக்காதா, கதை என்ன என்று எதுவுமே யோசிக்காமல்,அட்வான்ஸைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் துடிக்கின்றனர். இங்கேதான் தயாரிப்பாளர்கள் தவறு செய்கிறார்கள்.

ஒரு படம் ஓடிவிட்டால் அந்த நடிகன் பின்னால் அலைய வேண்டுமா?

சூப்பர் ஸ்டாரான ரஜினியே நல்ல கதையுடன் கூடிய படத்தில் நடித்தால்தான் வெற்றி பெற முடிகிறது. பாபா படம் ஓடவில்லை,காரணம் கதை சரியில்லை, ஆனால் சந்திரமுகி பிய்த்து வாங்குகிறது, காரணம் கதை.


ஹீரோக்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குறை கூறுவதில் நியாயம் இல்லை. காரணம் இவர்கள்தானேஒரு நடிகரை சூப்பர் நடிகராக்குகிகறார்கள். ஒரு படம் ஓடி விட்டால், உடனேயே அந்த நடிகரின் பின்னால் பணப் பெட்டியுடன்அலைகிறார்கள். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து அந்த நடிகரை பெரிய ஆளாக்கி விடுகிறார்கள்.

அப்படிப் பெரிய ஆளாக மாறிய நடிகர்கள், பின்னால் சம்பளத்தைக் குறைக்க வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.எனவே நடிகர்களின் பின்னால் அலைவதை தயாரிப்பாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். நடிகர்களை தேவையில்லாமல்வளர்த்து விடக் கூடாது.

நான் ஆரம்பத்தில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். பிறகு குறைத்து விட்டேன். இப்போது எனது சம்பளம் எவ்வளவுகுறைந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். எனது மன நிலை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும், வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதை உருவாக்க வேண்டியது தயாரிப்பாளர்கள்தான் என்று உண்மைகளைப் போட்டு உடைத்தார் சத்யராஜ்.

முன்னதாக இங்கிலீஷ்காரன் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ். சீனிவாசன் பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.

இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். பல சிரமங்களை சந்தித்தேன். சில நண்பர்களின்உதவியால்தான் தப்பிப் பிழைத்தேன் என்று அவர் அழுதபடி கூறியபோது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரின் முகங்களிலும்சோகம் அப்பிக் கொண்டது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜனும், நடிகர், நடிகைகளை ஒரு பிடி பிடித்தார். தயாரிப்பாளர்கள் இல்லாவிட்டால் ஒருநடிகருகம் கிடையாது, நடிகையும் கிடையாது. தயாரிப்பாளரை அழ வைக்கும் நடிகர், நடிகைகளை சினிமாவில் இருந்தேவிரட்டியடிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X