''சற்று முன் கிடைத்த தகவல்''...

சூப்பர் ஸ்டார்கள் ரஜினி, கமல், சிரஞ்சீவி மற்றும் விஜய், அஜீத் என பலரையும் வில்லன்களோடு மோத விட்டு ஆட்டுவித்தவர் கனல் கண்ணன்.
ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடியாக சில காட்சிகளிலும் அவ்வப்போது நடித்து வருபவர் கண்ணன். இந்த நிலையில் அவர் முழு நேர ஹீரோவாகியுள்ளார்.
நாளைய செய்தி, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம், மனசுக்குள் மத்தாப்பு உள்ளிட்ட படங்ளைக் கொடுத்த தக்காளி சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம்.
கண்ணனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அம்முவாகிய நான் நாயகி பாரதி. ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக விளங்கி இப்போது டிவி சீரியல்களில் செட்டிலாகி விட்ட கெளசல்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சவேரா ஹோட்டலில் இன்று மாலை நடக்கிறது.
பாடல்களை இன்று ரிலீஸ் செய்து விட்டு பிப்ரவரியில், படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











