»   »  அடாவடிக்கு தடை; சென்சார் அதிரடி

அடாவடிக்கு தடை; சென்சார் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யராஜ், சுந்தரா டிராவல்ஸ் ராதா, ஈரான் அழகி பர்வேஸ், சுஜா ஆகியோரது நடிப்பில்உருவாகியுள்ள அடாவடி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் கிளுகிளு பாடல்ஆகியவற்றை வெட்டில்தான், தருவோம் சர்டிபிகேட் என்று கூறி தடைபோட்டுவிட்டதாம் தணிக்கை வாரியம்.

உபேந்திரா நடித்து கன்னடத்தில் வெற்றி பெற்ற படம் ஏ. இதை தமிழில் தயாரிக்கும்உரிமையை ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் வாங்கியது.இப்படத்துக்கு முதலில் ரீல் நம்பர் 15 என்று பெயர் சூட்டினார்.

தமிழில் பெயர் சூட்டினால்தான் கேளிக்கை வரி ரத்து என்பதால், படத்தின் பெயரைஅடாவடி (இதுவும் தமிழோ?) என்று மாற்றினர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தநிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பட்டது.

படத்தின் சில காட்சிகளைப் பார்த்த தணிக்கை குழு டென்ஷனாகி விட்டதாம்.படத்தின் ஆரம்ப காட்சியில் சத்யராஜ் ஒரு மன நல மருத்துவனையில் இருந்துவெளியே வருகிறார். அவர் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. துப்பாக்கியுடன்அருகில் உள்ள ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைகிறார்.

சிலை முன்பு நின்று உலகில் நல்வங்க எல்லாம் செத்துட்டு இருக்காங்க. கெட்டவங்கவாழ்ந்துட்டு இருக்காங்க. அதைப்பார்த்துட்டு, நீ சும்மா இருக்கே. உனக்கு எதுக்குகோவில்?

அதனாலதான் உன்னை தூக்கிட்டுப்போய் கடலில் போடறாங்க. நானும் இப்பஅதைத்தான் செய்யப்போறேன். நீ இருக்க வேண்டிய இடம் கோவில் இல்லை. கடல்தான் என்று விநாயகர் சிலையை தூக்கிக் கொண்டு கடற்கரையை நோக்கி செல்கிறார்.

300 அடி நீளமுள்ள இந்த காட்சிக்கு தணிக்கை குழு தடை போட்டு விட்டதாம்.

அதேபோல, கோவிலில் புரோகிதர் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதும்போது சத்யராஜ்குறுக்கிட்டு யோவ் தப்பு தப்பா மந்திரம் ஓதாதே. நீ ஓதுகிற மந்திரம் யாருக்காவதுபுரிகிறதா என்று கேட்கும் காட்சிக்கும் தடை போட்டு விட்டதாம்.

அடுத்து, சத்யராஜ், சுஜா இணைந்து ஆடும் அட்டகாச குத்துப் பாட்டுக்கும் தடைபோட்டு விட்டார்களாம். திண்டுக்கல் பூட்டு எங்கிட்ட காட்டு என்று முதல் வரிவருகிறதாம். அதற்கப்புறம் வரும் வரிகளை காது கொடுக்க கேட்கமுடியவில்லையாம்.

அதை விட சுஜா போட்ட ஆட்டத்தை கண் கொடுத்துப் பார்க்க முடியவில்லையாம்.அம்புட்டு அசைவமாக இருக்கிறதாம் பாட்டு. இந்தப் பாட்டையும் எடுக்கணும்,எல்லாம் செய்தால்தான் சான்றிதழ் தர முடியும் என்று கூறி விட்டார்களாம்.

ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் சரவணன், சேகர், டைரக்டர் பரத் ஹன்னா ஆகியமூவரும் சம்மதிக்கவில்லை. மேலும் காட்சியின் அவசியத்தை பற்றியும் அவர்கள்கூறினார்கள். அதை தணிக்கை குழுவினர் ஏற்கவில்லை.

சொன்னவற்றை நீக்கினால் தான் சர்டிபிகேட் என்று கூறி, படத்துக்கு தடை விதித்துவிட்டார்கள். இதனால் மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு படத்தைஅனுப்பியுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil