»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யராஜுக்கு ரொம்பத்தான் லொள்ளு. தனக்கு வயதாகி விட்டதாக கூறி வருகிறாராம் சத்யராஜ். இதெல்லாம்லொள்ளு இல்லாமல் வேறு என்னவாம்?

வயதாகி ரொம்ப நாளாகி விட்ட போதிலும், தன் மகன் ஹீரோவாகி விட்டதால், இப்பத்தான் வயதாகி விட்டதாகஉணர்கிறாராம் சத்யராஜ்.

தன் மகனின் வளர்ச்சியில் தான் சத்யராஜ் இனிமேல் அதிக கவனம் செலுத்தப் போகிறாராம்.

மகன் சிபி ராஜ் நடிக்கும் "ஸ்டூடண்ட் நம்பர்-1" படத்தை நன்றாகக் கொண்டு வருவதற்காக மூத்த நடிகர் என்றமுறையில் மகனுக்கு பல டிப்ஸ்களை அள்ளிக் கொடுத்து வருகிறார் சத்யராஜ்.

அதேபோல சிபி ராஜ் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.

நல்ல கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே நடிப்பது, குப்பைப் படங்களில் (??) நடிப்பதைக் குறைத்துக் கொண்டுமகனுக்கு துணையாக இருப்பது என்ற முடிவுக்கும் சத்யராஜ் வந்து விட்டாராம்.

அப்ப மும்தாஜுடன் இனிமேல் சத்யராஜ் ஆட மாட்டாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil