பதானை விரட்டும் சாயாலி
| Click here for more images |
கிரிக்கெட் வீரர்கள் மீது நடிகைகளுக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அடுத்தடுத்து முன்னணி நடிகைகள் பலர் கிரிக்கெட் வீரர்களை வளைத்தும், வலை வீசியும், கலக்கி வருகின்றனர்.
முன்பு கங்குலியுடன் நக்மா கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அது புஸ்வானமாகிப் போனது. லேட்டஸ்டாக கிரிக்கெட் கேப்டன் டோணிக்கும், பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டார் தீபிகா படுகோணுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதை டோணி மறுக்கவில்லை. எனக்கும், அவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளது. இருவருக்குமே இதுதான் முதல் நட்பு, இதை பலப்படுத்த விரும்புகிறோம் என்று கூறியிருந்தார்.
இவர் தவிர யுவராஜ் சிங், ஜாகிர்கான் போன்றோருக்கு ஏற்கனவே காதலிகள் உள்ளனர். அடிக்கடி மாறிக் கொண்டும் உள்ளனர்.
இந்த நிலையில் இர்பான் பதானும் காதல் வலையில் சிக்கி விடுவார் போலத் தெரிகிறது. அவரைச் சுற்ற ஆரம்பித்துள்ளாராம் சாயாலி பகத்.
முன்னாள் மிஸ் இந்தியாவான சாயாலி, தி டிரெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார். முத்தத் திலகம் இம்ரான் ஹஷ்மிதான் இப்படத்தின் நாயகன்.
இந்த சாயாலிதான், இர்பான் பதான் மீது உருக ஆரம்பித்துள்ளார். இர்பான் குறித்து அவர் கூறுகையில், இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களிலேயே பதானைத்தான் எனக்கு ரொம்பப் பிடித்துள்ளது.
எனது கனவு நாயகன் திலீப்குமார். ஆனால் எனக்கு ரொம்பப் பிடித்தவர் கிரிக்கெட் வீரர் பதான்தான் என்று கூறியுள்ளார் சாயாலி.
இதுகுறித்து பதான் தரப்பில் என்ன கருத்து நிலவுகிறது என்று தெரியவில்லை.
ஏற்கனவே சாயாலி ராகுல் டிராவிட் மீது கிறக்கமாக இருந்தார். எம்.டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் டிராவிடைக் கல்யாணம் செய்து கொள்வதாக, அவரிடம் கூறி டிராவிடை நெளிய வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
சாயாலியிடம் பதான் சாய்வாரா?


Click it and Unblock the Notifications











