சஞ்சய் ஜாமீன் - 20ம் தேதி விசாரணை
| Click here for more images |
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். அவருக்கு தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டதால் மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 20ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் அடங்கிய பெஞ்ச் அறிவித்துள்ளது.
மும்பை தடா நீதிமன்றம் தனக்கு விதித்துள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார் தத்.
அதேபோல தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுவும் அதே தினத்தன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications











