»   »  பாலுவின் சினிமா ஸ்கூல்!

பாலுவின் சினிமா ஸ்கூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேமரா கவிஞன் பாலு மகேந்திரா ஒரு திரைப்படப் பள்ளியை ஆரம்பிக்கப் போகிறார்.

நெல் படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாலு மகேந்திரா. மலையாளத்தில் உருவான நெல் படத்தில் கேமராமேனாகபணியாற்றினார் பாலு. அதன் பிறகு எடிட்டிங்கிலும் புகுந்து விளையாடினார். இரண்டிலும் வெற்றிகரமான கலைஞராக அடையாளம் காணப்பட்டபின்னர் இயக்கத்தில் இறங்கினார்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என பாலுமகேந்திராவின் பெயர் டைட்டில் கார்டில் இடம் பெற்ற முதல் படம் கன்னடத்தில் வெளியான கோகிலா.கமல்ஹாசன், ஷோபா நடிப்பில் உருவான பிரமாதமான படம்.

கோகிலா பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ராஜபாட்டையில் நடக்க ஆரம்பித்தார் பாலு மகேந்திரா. அது ஒரு கனாக்காலம் படத்துடன் 19படங்களை இயக்கி முடித்துள்ள பாலுமகேந்திரா, தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

பாலுவைப பற்றிச் சொல்ல வேண்டுமானால் கூடவே இளையராஜா பற்றியும் பேச வேண்டும். காரணம், ராஜா இல்லாமல் இந்த மகேந்திரா படமேஎடுக்க மாட்டார். அந்த அளவுக்கு ராஜாவின் பக்தர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய 19 படங்களில் அழியாத கோலங்களைத் தவிர மற்றஅனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசை.

சமீப காலமாக அதிகப் படங்களை பாலு இயக்குவதில்லை. உடல் நலம் ஒரு பக்கம் இருந்தாலும், முனியாண்டி விலாஸக்கு மாறி விட்டரசிகர்களுக்கு பாலு மகேந்திரா தரும் சரவண பவன் சாப்பாடு ஒத்துவரவில்லை என்பதும் இன்னொரு காரணம்.

இப்போது, மகன் ஷங்கியின் வலியுறுத்தலின் பேரில், திரைப்படப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் பாலு. இது குறித்து மகேந்திராகூறுகையில்,

60 வயதைத் தாண்டி விட்டேன். ஏற்கனவே இருமுறை மரண வாயிலுக்குப் போய் வந்து விட்டேன். பக்கவாதமும் என்னை விடவில்லை. கடவுள்அருளால் இப்போது நலமாக உள்ளேன்.

இதற்கு மேலும் என்னால் படம் இயக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதேசமயம், நிறைந்த அனுபவத்துடன் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பதிலும் நியாயம் இல்லை.

எனக்குக் கிடைத்த அனுபவங்கங் என்னோடு மாண்டு போய் விடாமல், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். இந்த துறை எனக்குக்கொடுத்ததை இனிமேல் வரப் போகும் எதிர்கால கலைஞர்களுக்கு நான் திருப்பித் தர விரும்புகிறேன்.

எனவேதான் சினிமாவை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு பள்ளியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.முடிந்தவரை சொந்தக் காலில் நடப்பேன், முடியாவிட்டால் ஆட்டோவில் ஏறிப் பயணிப்பேன் என்று முடித்தார், தனக்கே உரிய முத்திரைப் பேச்சுடன்.

தோள் கொடுக்க கூட பல கால்கள் வரும், டோண்ட் ஒர்ரி பாலு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil