ஷாருக் கான் வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து ஷாருக் கான் தெரிவித்த கருத்துக்களை சிவசேனா கடுமையாக கண்டித்து விமர்சித்துள்ளது. அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளது.
மேலும் ஷாருக் கான் நடித்துள்ள மே நேம் இஸ் கான் படத்தை திரையிட விட மாட்டோம் எனவும் கூறியுள்ளனர். அந்தப் படம் தொடர்பான போஸ்டர்களை கிழிப்பதும், படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுவதுமாக உள்ளனர்.
இந்த நிலையில் பந்த்ராவில் உள்ள மன்னாத் எனப்படும் ஷாருக் கானின் வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யப்ப் போவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கட்சி எம்.எல்.சி. அனில் பரப் என்பவர் தலைமையில் சிவசேனா கட்சியினர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
அனில் பரப் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக ஷாருக் கான் தொடர்ந்து பேசினால் அவர் பேசாமல் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும் என்றார்.
மும்பை - பாகிஸ்தான் டிக்கெட்டையும் சிவசேனாவினர் காட்டி, ஷாருக் கானின் புதிய படத்தைத் தடை செய்வோம் என்று கத்தினர்.
இந்தப் போராட்டங்களை சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி நியாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேச பக்தி சம்பந்தப்பட்டது. அரசியலில் ஷாருக் கான் தலையிடக் கூடாது.
பல வருடங்களாக மும்பையில் தங்கியிருக்கிறார் ஷாருக். ஆனால் அவர் ஒருமுறை கூட மராத்தியில் பேசியதே இல்லை என்றார் ஜோஷி.


Click it and Unblock the Notifications











