சிரஞ்சீவிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஆந்திரத் திரையுலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளார். இன்னும் 3 மாதங்களில் அரசியலுக்கு வரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து சிரஞ்சீவிக்கு ஆந்திர அரசு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அவரது வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு நான்கு போலீஸார் கொண்ட பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில உளவுப் பாதுகாப்புப் பிரிவு இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே சிரஞ்சீவிக்கு உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அவர் கட்டணம் செலுத்துகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, மாநிலத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அரசே வழங்கும் பாதுகாப்பாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











