»   »  தமிழனை ஒதுக்கும் சினிமா-சீமான் பாய்ச்சல் தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே தரப்படவில்லை என இயக்குனர் சீமான்குமுறியுள்ளார்.நெய்வேலியில் தமிழர் பண்பாட்டு கழகத்தில் நடந்த விழாவில் சீமான் பேசியதாவது,தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற நிலையை நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும்.கடந்த 5 ஆண்டுகளாக சொந்த மண்ணான தமிழ்நாட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால்பிற மாநிலங்களுக்கும், புதுவைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ. 5,000 ஆக இருந்த படப்பிடிப்புவாடகைக் கட்டணத்தை ரூ. 25,000ஆக உயர்த்தி சாதனை புரிந்தவர் தான் ஜெயலலிதா.மக்களின் வரிப் பணம் ரூ. 400 கோடியை கொண்டு கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனதுபெயரையே சூட்டிக் கொண்டது வேடிக்கையான விஷயம். ஏன் அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் பெயரையோ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரையோ வைத்திருக்க கூடாது?மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை இழுத்து மூடச் செய்தவர் தான் ஜெயலலிதா. கடந்த 30 ஆண்டுகளாகதமிழக திரைப்பட துறையில் பிற மாநிலங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. முக்கிய ஊடகமானதிரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவதில்லை என்றார் சீமான்.

தமிழனை ஒதுக்கும் சினிமா-சீமான் பாய்ச்சல் தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே தரப்படவில்லை என இயக்குனர் சீமான்குமுறியுள்ளார்.நெய்வேலியில் தமிழர் பண்பாட்டு கழகத்தில் நடந்த விழாவில் சீமான் பேசியதாவது,தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற நிலையை நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும்.கடந்த 5 ஆண்டுகளாக சொந்த மண்ணான தமிழ்நாட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால்பிற மாநிலங்களுக்கும், புதுவைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ. 5,000 ஆக இருந்த படப்பிடிப்புவாடகைக் கட்டணத்தை ரூ. 25,000ஆக உயர்த்தி சாதனை புரிந்தவர் தான் ஜெயலலிதா.மக்களின் வரிப் பணம் ரூ. 400 கோடியை கொண்டு கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனதுபெயரையே சூட்டிக் கொண்டது வேடிக்கையான விஷயம். ஏன் அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் பெயரையோ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரையோ வைத்திருக்க கூடாது?மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை இழுத்து மூடச் செய்தவர் தான் ஜெயலலிதா. கடந்த 30 ஆண்டுகளாகதமிழக திரைப்பட துறையில் பிற மாநிலங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. முக்கிய ஊடகமானதிரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவதில்லை என்றார் சீமான்.

Subscribe to Oneindia Tamil
தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே தரப்படவில்லை என இயக்குனர் சீமான்குமுறியுள்ளார்.

நெய்வேலியில் தமிழர் பண்பாட்டு கழகத்தில் நடந்த விழாவில் சீமான் பேசியதாவது,

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற நிலையை நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக சொந்த மண்ணான தமிழ்நாட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால்பிற மாநிலங்களுக்கும், புதுவைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ. 5,000 ஆக இருந்த படப்பிடிப்புவாடகைக் கட்டணத்தை ரூ. 25,000ஆக உயர்த்தி சாதனை புரிந்தவர் தான் ஜெயலலிதா.

மக்களின் வரிப் பணம் ரூ. 400 கோடியை கொண்டு கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனதுபெயரையே சூட்டிக் கொண்டது வேடிக்கையான விஷயம். ஏன் அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் பெயரையோ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரையோ வைத்திருக்க கூடாது?

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை இழுத்து மூடச் செய்தவர் தான் ஜெயலலிதா. கடந்த 30 ஆண்டுகளாகதமிழக திரைப்பட துறையில் பிற மாநிலங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. முக்கிய ஊடகமானதிரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவதில்லை என்றார் சீமான்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil