»   »  பார்த்திபன் மீது சீதா பாய்ச்சல் !

பார்த்திபன் மீது சீதா பாய்ச்சல் !

Subscribe to Oneindia Tamil

எந்த வேகத்தில் கல்யாணம் செய்து கொண்டார்களோ, அதே வேகத்தில் பிரிந்தும் போய் விட்ட பார்த்திபன், சீதா தம்பதியினருக்கிடையே சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மோதல் துளிர் விட்டுள்ளது.

சினிமா நடிகர்கள், நடிகைகள் கல்யாணம் செய்து கொள்வதும், பின்னர் பிரிந்து விடுவதும் தமிழ் சினிமாவில் புதிதில்லை. ஆனால் பார்த்திபனும், சீதாவும் கல்யாணம் செய்து கொண்டு அழகான இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு அமைதியாக வாழத் தொடங்கியபோது, அவர்கள் விஷயத்தில் இந்த பழம்பெரும் வாதம் செல்லாது போலும் என்று தமிழகமே நினைக்கத் தொடங்கியது.

சினிமாக்காரர்களே பொறாமைப்படும்படியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இருவரும். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும், ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாதர் பார்த்திபன்.

இப்படி கருத்தொற்றுமையுடன் இருந்த இருவரும் ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பல்வேறு கிசுகிசுக்கள், குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகளுடன் பிரிந்தபோது திரையுலகே அதிர்ச்சியடைந்தது. இவர்களா பிரிந்தது என்ற வியப்பு சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கும் ஏற்பட்டது.

டிவி நடிகருடன் சீதாவுக்குத் தொடர்பு இருப்பதாக கிளம்பிய செய்திகளையடுத்தே பார்த்திபனும், சீதாவும் பிரிந்தார்கள் என்று கூறப்பட்டது. பின்னர் பஸ் அதிபர் ஒருவருடன் சீதாவுக்குத் தொடர்பு இருப்பதாகவும் பேச்சு எழுந்தது.

பார்த்திபன், சீதா பிரிந்தபோது, அவர்களது இரு குழந்தைகளும் பார்த்திபனுடன் வந்து விட்டனர். முதல் மகளான அபிநயா மட்டும் சீதாவுடன் சென்று விட்டார். இப்போது அபிநயாவும், பார்த்திபனிடமே வந்து விட்டார். சீதா தனது தாயாருடன் தனியாக உள்ளார். சினிமாக்களில் அம்மா, அக்கா வேடத்திலும், டிவியிலும் நடித்துக் கொண்டுள்ளார் சீதா.

பிரிவுக்குப் பின்னர் சற்று அமைதியாக இருந்து வந்த இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடங்கி வைத்திருப்பவர் சீதாதான். சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு கஷ்டம் வந்ததேபாதும், துயரமடைந்த போதும் என் மீது அன்பு செலுத்தியதும், ஆதரவு காட்டியதும் எனது குழந்தைகள்தான். இப்போது அவர்களையும் பார்த்திபன் பிரித்துச் சென்று விட்டார்.

குழந்தைகளுக்கு இப்போது எதுவும் தெரியாது. பெண் குழந்தைகளை வளர்க்க ஒரு அம்மாவால்தான் முடியும் என்பது கூடவா இந்த "அதி புத்திசாலி"க்குத் தெரியாது? பெண் குழந்தைகளின் பிரச்சினைகளை இவரால் எப்படி முறைப்படி அணுகி தீர்க்க முடியும்?

அவரைப்போல ஒரு விளம்பரப் பிரியரை நான் பார்த்ததே இல்லை. தம்பட்டம் அடிப்பதிலேயே குறியாக இருப்பார். குடும்பப் பிரச்சினைகளை கூட செய்தியாக்கும் மனம் படைத்தவர் அவர்.என்னைப் பற்றிப் பரவிய பல வதந்திகளுக்கு அவர்தான் காரணம்.

வெறுமனே பூஜைகளை மட்டும் போட்டுக் கொண்டு, தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடித்துக் கொண்டு, புதுமை என்ற பெயரில் பேத்துவதை விட்டு விட்டு நல்லதாக நாலு படம் எடுக்க அவர் முயற்சிக்கவேண்டும்.

புது வருஷத்துக்கு என்ன பண்ணலாம் என்று குழம்பிக்கொண்டு இருக்கிற நேரத்தில் நல்ல படமாக அவர் பண்ணலாம். அவரிடம் முதலில் மனித நேயம் இல்லை. அதை அவர் முதலில் கற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள் பற்றி பிறகு கவலைப்படலாம் என்று கடுமையாக சாடியுள்ளார் சீதா.

Read more about: seetha blasts parthiban

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil