தலைவன் இருக்கின்றான் நிறுத்தம்.... செல்வராகவன் - கமல் கூட்டணியில் புதிய படம்?

கிட்டத்தட்ட அந்த கதைதான் செல்வராகவனுடையதும். ஆயிரத்தில் ஒருவன் படம் முடிந்த பிறகு, தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் படம் செய்கிறார் என்றும், விக்ரமுடன் இணைகிறார் என்றும் செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் விஜய்யை வைத்து ஏ எம் ரத்னத்துக்காக படம் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.
இவையனைத்துமே பொய்யான நிலையில், இப்போது தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' படம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், கமல்ஹாஸனை வைத்து ஒரு படம் இயக்குகிறார் செல்வராகவன் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல் அடுத்து இயக்குவதாக இருந்த தலைவன் இருக்கின்றான் படம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் படத்துக்குப் பதில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமல் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை பெங்களூர் ரிசார்ட்டில் வைத்து செல்வராகவன் எழுதி முடித்துவிட்டதாகவும், அதைப் படித்துப் பார்த்த கமல், மிக அருமையாக உள்ளதாகப் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்கிறார்கள் கமல் தரப்பில்.
மிஷ்கின் நிலைமை வராமலிருக்கக் கடவது!!


Click it and Unblock the Notifications











