காதல் கொண்டேன் பட பாடலில் உண்மை சம்பவத்தை அப்படியே வைத்தார் செல்வராகவன்.. நடிகை சோனியா அகர்வால்!
சென்னை : செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன்
மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சோனியா அகர்வால் நடித்து இருப்பார்
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடலின் இடையில் வரும் ஒரு காட்சி உண்மையில் நடந்தது என நடிகை சோனியா அகர்வால் தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில்
வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் இயக்குனர் செல்வராகவன்.துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை,மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே என தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது வரும் இயக்குனர் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணையும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் தனி எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.

நானே வருவேன்
காதல் கொண்டேன் ,புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. பழைய இந்த கூட்டணி மீண்டும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைய உள்ளது அதன் படி நானே வருவேன் படம் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளது. இப்படம் ஹாரர் பின்னணியில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடர்ந்து செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டை தனுஷை வைத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது

காதல் கொண்டேன்
எப்போதும் வித்தியாசமான காதல் கதைகளை கையாளும் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தையும் அப்படித்தான் கையாண்டிருப்பார் நடிகர் தனுஷ் இந்த படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் இடம்பெறும் காதல் காதல் காதல் நெஞ்சில் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.

உண்மை சம்பவத்தை அப்படியே வைத்ததார்
அதில் இருவரும் ஒரு காட்சியில் ஒரே இயர் போனில் தனுஷூம் சோனியா அகர்வாலும் பாடல் கேட்டுக்கொண்டே தலையை ஆட்டுவார்கள். அது பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும் . அந்த காட்சி உண்மையிலேயே நடந்ததாக நடிகை சோனியா அகர்வால் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்த போது அப்போது முன் சீட்டில் அமர்ந்திருந்த தனுஷ் பாடல் கேட்டுக்கொண்டே வந்துள்ளார். அப்பொழுது அருகிலிருந்த சோனியா அகர்வாலுக்கு இயர் போனில் ஒரு பக்கம் கொடுத்து இருவரும் ரசித்து கேட்டு வந்துள்ளனர். இதனை காரின் பின் சீட்டில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த செல்வராகவன் அந்த காட்சியை அப்படியே பாடலில் வைத்தார். அது எடுக்கப்பட்டது மறக்க முடியாத சுவாரசியமான அனுபவம் என நடிகை சோனியா அகர்வால் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











