கற்காலத்தை படம் பிடிக்கும் செல்வராகவன்!

இந்தப் படம் கிமு 5000 வருடங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ராணா டகுபதி. ராமாநாயுடுவின் பேரன். இவரது தந்தை சுரேஷ், தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் இந்தப் படத்தை எடுக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இருமொழிப் படம் இது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற ராணா, "இந்தப் புதிய முயற்சி சரித்திரம் படைக்கும் படமாக வரப்போகிறது. இதுவரை இந்தியாவில் தயாராகாத படமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. கதைக்களம் கி மு 5000 வருடங்களில் நடப்பதாக உள்ளது. இயக்குநர் செல்வராகவன் மிகுந்த சிரத்தையும் கவனமும் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார்.
தமிழிலும் எனக்கு பெரிய களத்தை உருவாக்கவிருக்கிறார். எனக்குள்ள ஒரே பிரச்சனை, என் உயரத்துக்கு கதாநாயகி அமையவேண்டும் என்பதுதான்..." என்றார்.
விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











