செந்தில் நாயகி மீனா?

By Staff

Meena
கலக்கல் காமெடியனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட செந்தில், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாளவிகாவும் படத்தில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது.

கவுண்டமணியிடம் அடி வாங்கியே அப்பருக்குப் போனவர் செந்தில். தனித்தும் பல படங்களில் கலக்கியுள்ளார். நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு கலக்கி வந்த செந்தில் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ஆதிவாசியும் அதிசய பேசியும்.

இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் மாலன். இதுகுறித்து அவர் கூறுகையில், செந்தில் சாருக்கு ஜோடியாக நடிக்க மீனா, மாளவிகா உள்ளிட்ட முக்கிய நடிகைகளை அணுகியுள்ளோம் என்றார்.

இந்த இரு முன்னாள் முன்னணி நாயகிகளையும் அணுகியுள்ளதை படத்தின் தயாரிப்பாளர் பாபுவும் உறுதி செய்தார்.

முன்னாள் நாயகியான மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனைத்துப் பிரபல நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து பெரிய ரவுண்டு அடித்து ஓய்ந்தவர். இளம் தலைமுறை நடிகர்களான அஜீத், விஜய் படங்களிலும் தலை காட்டியுள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் டிவியில் நடித்து வருகிறார் மீனா. அதேபோல மஸ்தானா மஸ்தானா என்ற சன் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியிலும் நடுவராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில் தன்னைத் தேடி வந்துள்ள செந்தில் பட வாய்ப்பை மீனா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு ஆதிவாசி அழகி வேடம் கொடுக்கப்படவுள்ளதாம். சற்றே கவர்ச்சிகரமான ரோலும் கூடவாம் இது. மீனாவிடமிருந்து உறுதியான பதிலை இயக்குநர் மாலன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

அதேபோல மாளவிகாவும் நடிக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஓ.கே. என்று கூறியிருக்கிறாராம் மாளவிகா.

கதைப்படி, ஆதிவாசியான செந்தில் கையில் ஒரு செல்போன் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர் எப்படியெல்லாம் திண்டாடுகிறார், என்னென்ன குழப்பங்களையெல்லாம் சந்திக்கிறார் என்பதை காமெடி கலந்து கொடுக்கப் போகிறாராம் மாலன்.

காமெடி நாயகர்களுடன் முன்னணி நடிகைகள் ஜோடி போடுவது புதிதல்ல. முன்பு கவுண்டமணி நாயகனாக நடித்தபோது அந்தக் காலத்து லீடிங் லேடிகளான ரம்யா கிருஷ்ணன், ஜீவிதா ஆகியோர் ஜோடி போட்டனர்.

லேட்டஸ்டாக வடிவேலு ஹீரோ ஆனபோது தேஜாஸ்ரீயும், மோனிஷாவும் ஜோடி சேர்ந்தனர். விவேக்குடன் சாயா சிங் ஜோடியாக நடித்துள்ளார். வடிவேலுவுடன் ஷ்ரியா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் கூட போட்டுள்ளார்.

இந்த 'புகழ்' வரிசையில் தற்போது செந்திலும் சேரவுள்ளார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X