திரையுலகில் ‘நட்புடன்’ வாழும் நட்சத்திர தம்பதிகள்’: ஷாரூக்-கௌரி முதலிடம்...

மும்பை: இன்று நண்பர்கள் தினம். எனவே, திரையுலகில் நல்ல நண்பர்களாக வாழும் கணவன் மனைவிகள் குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது தனியார் திருமண தகவல் மையம் ஒன்று.

இதில், நல்ல நட்புடன் வாழக்கூடிய தம்பதிகளாக ஷாரூக் மற்றும் அவரது மனைவி கௌரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

ஏற்கனவே, தந்தையர் தினத்துக்காக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் மிகச் சிறந்தத் தந்தையாக ஷாரூக் தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் தினம்...

நண்பர்கள் தினம்...

வருடந்தோறும் ஆகஸ்ட் 4ம் தேதி உலகளவில் நண்பர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. நட்பிற்கு வயதோஅல்லது வேறு எந்த பேதங்களோ கிடையாது. இந்நிலையில் திரையுலகில் நட்புடன் வாழும் நட்சத்திர தம்பதிகள் பற்றிய கருத்துக் கணிப்பை ஆன்லைனில் நடத்தியது தனியார் திருமணத் தகவல் மையம் ஒன்று.

நல்லதொரு குடும்பம்...

நல்லதொரு குடும்பம்...

இந்தக் கருத்துக்கணிப்பில் 45.3சதவீதம் ஓட்டுக்கள் பெற்று, ஹிந்தி சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானும், அவரது மனைவியும் முதலிடம் பெற்றுள்ளனர்.

அதாச்சுங்க 22 வருஷம்...

அதாச்சுங்க 22 வருஷம்...

இந்த நட்சத்திரத் தம்பதிகளுகு 1991ம் ஆண்டு திருமணமானது. தற்போது ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம் கான் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தக்.. தக் கேர்ள்...

தக்.. தக் கேர்ள்...

இரண்டாவது இடத்தில் நடிகை மாதிரி தீட்ஷித்ம் அவரது கணவர் ஸ்ரீராம் -ம் பெற்றுள்ளனர். இவர்களது ஓட்டு சதவீதம் 32.3 ஆகும்.

மூன்றாவது இடத்தில்...

மூன்றாவது இடத்தில்...

மூன்றாவது இடத்தில் 22.5 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று நடிகரும், இயக்குநருமான பர்ஹான் அக்தரும் அவரதுமனைவி அதுனாவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அன்பில் ஜெயித்தவர்கள்...

அன்பில் ஜெயித்தவர்கள்...

இக்கருத்துக்கணிப்பை நடத்திய சாதி.காம் சிஓஓ கவ்ரவ் ரக்‌ஷித் இது குறித்து கூறும்போது, ‘ இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் உறவுகளில் உள்ள நட்பு நன்றாகப் புலப்படுகிறது. இதில் தேர்வாகியிருக்கும் சினிமா பிரபலங்கள் நட்பிலும் ஜெயித்து, தொழிலிலும் ஜெயித்தவர்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

அம்மாவும், நானும்...

அம்மாவும், நானும்...

கருத்துக்கணிப்பின் மற்றொரு பிரிவான சிறந்த தாய்-மகன் நட்புக்கு ரன்பீர் கபூரும், அவரது அம்மா நீது கபூரும் 63.7 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

அபியும், நானும்...

அபியும், நானும்...

அதேபோல், சிறந்த அப்பா-மகள் நட்பாக சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் அவரது அப்பா சத்ருஹன் சின்ஹா தேர்வாகியுள்ளனர். இவர்களது ஓட்டு சதவீதம் 38.9 ஆகும்.

அப்பா-மகன் பிரிவு...

அப்பா-மகன் பிரிவு...

அமிதாப்பும், அவரது மகன் அபிஷேக்கும் 53.8 சதவீத ஓட்டுகளுடன் சிறந்த அப்பா-மகன் நட்புக்கு உதாரணமாக தேர்வாகியுள்ளனர்.

சகோதர நட்பு...

சகோதர நட்பு...

உடன் பிறந்தவர்களுக்கு இடையே உள்ள நட்புப் பிரிவில், சல்மான் அவரது சகோதரர் அர்பாஷ் மற்றும் சோஹைல் கான் ஆகியோர் 69.6 சதவீத ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

சகோதரிகள்....

சகோதரிகள்....

பெண்களுக்கான பிரிவில் கரீனா கபூரும், கரீஷ்மா கபூரும் 38.4 சதவீத ஓட்டுகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X