வேட்டையாடு விளையாடு இந்தி ரீமேக்கில் ஷாருக்கா, சல்மானா?

பாலிவுட் நடிகர்களின் கவனமெல்லாம் தற்போது கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு தமிழ் படங்களை ரீமேக் செய்து வெற்றி நாயகனாகத் திகழ்கிறார் சல்மான் கான். அண்மையில் விஜய் நடித்த காவலன் படத்தை பாடிகார்டு என்ற பெயரில் இந்தியில் எடுத்து சல்மான் நடித்தார்.
படம் ரிலீஸ் ஆன நாளே பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. இதைப் பார்த்த மற்ற இந்தி நடிகர்களுக்கும் தமி்ழ் படங்கள் மீது புது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கவுதம் மேனன் கமல் ஹாசன், கமலினி முகர்ஜி, ஜோதிகாவை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் திரைப்படமான வேட்டையாடு விளையாடை இந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளார். இதில் கமல் கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக் கான் மற்றும் அவரது எதிரியான சல்மான் கான் ஆகியோர் பெயர்கள் கவுதம் மனதில் உள்ளது. இதில் எந்த கான் ஹீரோவாகப் போகிறார் என்பது கவுதமுக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











