»   »  மீண்டும் மலையாளத்தில் ஷகீலா

மீண்டும் மலையாளத்தில் ஷகீலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளப் படங்களே வேண்டாம் என்று கோச்சுக் கொண்டு போன ஷகீலா தனதுமுடிவை மறு பரிசீலனை செய்து விட்டு மீண்டும் மல்லுவுட்டுக்குள் காலடி எடுத்துவைத்துள்ளார்.

மம்முட்டி, மோகன்லால் படங்களை ஓரங்கட்டி ஓட வைத்தவர் ஷகீலா. அவரதுசாப்ட்போர்ன் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்ததைப் பார்த்துமிரண்டு போன மலையாள சூப்பர் ஸ்டார்கள், ஒன்று சேர்ந்து அரசின் உதவியுடன்ஷகீலாவை மலையாளத்திலிருந்து பத்தி விட்டனர்.

இதனால் மலையாளப் படங்களுக்கு முழுக்குப் போட்ட ஷகீலா தமிழில் துண்டுதுக்கடா ரோல்களில் தலையைக் காட்டி வந்தார். மலையாள ஷகீலாவை எதிர்பார்த்ததமிழ் ரசிகர்களுக்கு தமிழ் மயமான ஷகீலா பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.இருந்தாலும் ஷகீலா என்ற மந்திர வார்த்தையால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், ஷகீலாவைதொடர்ந்து ரசிக்கவே செய்தனர்.

தமிழில் பெரிய ரேஞ்சுக்கு ஷகீலாவுக்கு ரோல்கள் கிடைக்கவில்லை, அதோபோலதெலுங்கிலும் சரியாக போணியாகவில்லை. என்னதான் இருந்தாலும் மலையாளம் ,மலையாளம்தான என்ற எண்ணத்திற்கு வந்தார் ஷகீலா.

இதையடுத்து மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க தனது பழைய நட்புகளுக்குதூது விட்டார். இதன் பலனாக ஒரு படத்தில் கன்னியாஸ்திரி வேடம் கிடைத்தது.இதுவும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது இன்னொரு மலையாளப்படத்திலும் ஷகீலா திறமை காட்டுகிறாராம். படத்தின் பெயர் லவ் இன் பாங்காக்(அட்டா, கிளாமரை பிழிந்தெடுக்க சூப்பரான டைட்டில்!).

படத்தின் நாயகியாக முன்னாள் மிஸ் ஆசியா ஜெனீபர் கோத்வால் நடிக்கிறாராம்.விஜய் என்பவர் ஹீரோ பையனாக வருகிறார். படத்தை பெங்களூரிலும்,பாங்காக்கிலும் வைத்து சுடவுள்ளனர்.

இவர்கள் தவிர வினயா பிரசாத், ராகுல்தேவ் ஆகியோரும் படத்தில் உள்ளனராம்.ஷகீலாவுக்கு இப்படத்தில் முக்கியமான கேரக்டராம். வேறென்னவாக இருக்கமுடியும்? கிளாமர், கிளாமர், கிளாமர் மட்டுமே.

ஷகீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை பாங்காக்கில் வைத்து சுடவுள்ளனராம் (ரொம்பப்பொருத்தமான இடம்). ரசிகர்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில் ஷகீலாவைஇப்படத்தில் காட்டப் போகிறார்களாம். இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில்மீண்டும் ஒரு ரவுண்டு வர ரெடியாகி வருகிறார் ஷகீலா.

ரசிக மக்கா எல்லாம் இப்பயே ரெடியாய்க்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil