ஷகீயின் அலேக் முடிவு! குண்டு உடம்பில் முண்டு கட்டி ரசிகர்களின் இதயத்தை குண்டுக் கட்டாக தூக்கி கிக்ஏற்றி வந்த ஷகீலா கிளாமரை விட்டு விட்டார், அதற்குப் பதிலாக தடாலடி முடிவுஒன்றை அறிவித்து அரசியல்வாதிகளை குளிர வைத்துள்ளார்.வெள்ளித் திரையின் முக்கால்வாசிப் பாகத்தை, தனது பரந்து விரிந்த உடலால் நிரப்பி,ரசிகர்களின் இதயத்தை தாறுமாறாக துடிக்க வைத்தவர் ஷகீலா.அவர் போட்ட கிளாமர் போடால், பயந்து போன மலையாள ஹீரோக்கள்ஒட்டுமொத்தமாக கூடி, கேரள அரசிடம் குமுறி, ஒரு வழியாக ஷகீலாவைஅங்கிருந்து விரட்டி விட்டனர்.மலையாளம் தன்னைக் கைவிட்டதால் தமிழுக்கு ஓடோடி வந்தார் ஷகீலா. இங்கும்அதேபோல கிளாமர் காட்டும் வாய்ப்புகளே வந்ததால், அதைத் தவிர்த்து விட்டுகாமெடி, லேசு பாசான கிளாமர் என்று மாற்றம் கண்டார். ஆனாலும் தொடர்வாய்ப்புகல் வரவில்லை. தெலுங்கிலும் இதே நிலைதான்.இதனால் ஒரு கல்யாணத்தையும் ரகசியமாய் செய்து கொண்டு அக்கடா என்றுஇப்போது பெரும்பாலான நேரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். திடீரென தனதுசுயசரிதையை எழுதி, எனது சதைக்குப் பின்னால் அலைந்த கூட்டத்தைஅம்பலப்பபடுத்துவேன் என்று குண்டைப் போட்டார்.இதனால் கதி கலங்கிய பல கேரளப் பெரும்புள்ளிகள், ஷகியிடம், எதற்கு இந்தவேண்டாத வேலை என்று அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்ததால் சுய சரிதைஐடியாவை விட்டு விட்டார்.இப்போது இன்னொரு முடிவை எடுத்துள்ளார். அது அரசியல். நடிகர், நடிகைகள்அரசியலில் புகுவது, குதிப்பது, நீச்சலடிப்பது புது பேஷனாகி விட்டது.அதற்கு ஷகீயும் விதி விலக்கல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சியில் சேர்ந்துபிரசாரம் செய்யப் போவதாக அவர் கூறி வருகிறாராம்.அவர் சேர விரும்பும் கட்சி அதிமுக. ஆனால் அம்மாவின் பச்சைக் கொடிஷகீலாவுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் படு தீவிரமாகமுயற்சித்து வருகிறாராம் ஷகீலா.அதிமுகவில் சேர்ந்து தமிழகம் முழுவதும் தான் பிரசாரம் செய்தால், நிச்சயம்பெருவாரியான ஓட்டுக்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்என்று மார் தட்டி கூறி வருகிறாராம் ஷகீலா.ஆனால், இவரை மேடையேற்றினால் இருக்கும் ஓட்டும் போய்விடும், பெயரும்கெட்டுவிடும் என அதிமுக அஞ்சுவதாகத் தெரிகிறது. என்ன திடீர்னு அரசியல் ஆசை ஷகீயிடம் என்று கேட்டால், சினிமாவுக்கு அடுத்துநான் அதிகம் நேசிப்பது அரசியலைத்தான். (அரசியல்வாதி மாதிரியே பேசுறாரே).தமிழக அரசியல் நிலவரம் குறித்து எனக்கு லேட்டஸ்ட் மூவ் வரை நல்லாத் தெரியும்.அப்படி இருக்கையில் நாமும் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம்தான்இப்போது எனது அரசியல் ஆசையை விஸ்வரூபம் எடுக்கத் தூண்டியுள்ளது என்கிறார்ஷகீலா.விரைவில் குண்டுகல்யாணம், பிந்துகோஷ், தியாகு, செந்தில், சந்திரசேகர், முரளிபோன்றவர்கள் வரிசையில் ஷகீலாவும் விரைவில் ஏதாவது ஒரு கட்சி மேடையில்ஏறினாலும் ஆச்சரியமில்லை.இதற்கிடையே மனசுக்குள்ளே என்ற படத்தில் ஷகீலா கல்லூரி மாணவி வேடத்தல்நடிப்பது உங்களுக்கு தெரிந்தது தானே.காலேஜில் பிஏ படிக்கப் போகும் ஷகீலா கூடப் படிக்கும் மாணவர்களை கவர்ந்துஇழுப்பது மாதிரி கதையாம்.(காதலுக்கு கண்ணில்லை என்று படித்திருக்கிறோம்.. வெயிட்டும் இல்லையோ?)இந்தப் படத்தில் ஷகீலா பாடுவது போன்ற ஒரு பாடலும் வருகிறது.. அந்தப் பாட்டுவரிகள் இதோ...நீதானே காதலா ஓடாதே பயந்து ஓடாதேமம்மூட்டிகிட்டே, மோகன்லாலுகட்டேஎன்ன பத்தி கேட்டுப்பாரு..சென்சாரு கிட்ட எம்பேரு சொன்னாமூக்கு வேர்க்கும் பாரு..வரிகளை முகம் வேர்க்க சொல்லிவிட்டுச் சிரித்தார் மனசுக்குள்ளே இயக்குர் ஸ்ரீகுரு.

By Staff

குண்டு உடம்பில் முண்டு கட்டி ரசிகர்களின் இதயத்தை குண்டுக் கட்டாக தூக்கி கிக்ஏற்றி வந்த ஷகீலா கிளாமரை விட்டு விட்டார், அதற்குப் பதிலாக தடாலடி முடிவுஒன்றை அறிவித்து அரசியல்வாதிகளை குளிர வைத்துள்ளார்.

வெள்ளித் திரையின் முக்கால்வாசிப் பாகத்தை, தனது பரந்து விரிந்த உடலால் நிரப்பி,ரசிகர்களின் இதயத்தை தாறுமாறாக துடிக்க வைத்தவர் ஷகீலா.

அவர் போட்ட கிளாமர் போடால், பயந்து போன மலையாள ஹீரோக்கள்ஒட்டுமொத்தமாக கூடி, கேரள அரசிடம் குமுறி, ஒரு வழியாக ஷகீலாவைஅங்கிருந்து விரட்டி விட்டனர்.

மலையாளம் தன்னைக் கைவிட்டதால் தமிழுக்கு ஓடோடி வந்தார் ஷகீலா. இங்கும்அதேபோல கிளாமர் காட்டும் வாய்ப்புகளே வந்ததால், அதைத் தவிர்த்து விட்டுகாமெடி, லேசு பாசான கிளாமர் என்று மாற்றம் கண்டார். ஆனாலும் தொடர்வாய்ப்புகல் வரவில்லை. தெலுங்கிலும் இதே நிலைதான்.


இதனால் ஒரு கல்யாணத்தையும் ரகசியமாய் செய்து கொண்டு அக்கடா என்றுஇப்போது பெரும்பாலான நேரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். திடீரென தனதுசுயசரிதையை எழுதி, எனது சதைக்குப் பின்னால் அலைந்த கூட்டத்தைஅம்பலப்பபடுத்துவேன் என்று குண்டைப் போட்டார்.

இதனால் கதி கலங்கிய பல கேரளப் பெரும்புள்ளிகள், ஷகியிடம், எதற்கு இந்தவேண்டாத வேலை என்று அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்ததால் சுய சரிதைஐடியாவை விட்டு விட்டார்.

இப்போது இன்னொரு முடிவை எடுத்துள்ளார். அது அரசியல். நடிகர், நடிகைகள்அரசியலில் புகுவது, குதிப்பது, நீச்சலடிப்பது புது பேஷனாகி விட்டது.

அதற்கு ஷகீயும் விதி விலக்கல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சியில் சேர்ந்துபிரசாரம் செய்யப் போவதாக அவர் கூறி வருகிறாராம்.

அவர் சேர விரும்பும் கட்சி அதிமுக. ஆனால் அம்மாவின் பச்சைக் கொடிஷகீலாவுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் படு தீவிரமாகமுயற்சித்து வருகிறாராம் ஷகீலா.

அதிமுகவில் சேர்ந்து தமிழகம் முழுவதும் தான் பிரசாரம் செய்தால், நிச்சயம்பெருவாரியான ஓட்டுக்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்என்று மார் தட்டி கூறி வருகிறாராம் ஷகீலா.


ஆனால், இவரை மேடையேற்றினால் இருக்கும் ஓட்டும் போய்விடும், பெயரும்கெட்டுவிடும் என அதிமுக அஞ்சுவதாகத் தெரிகிறது.

என்ன திடீர்னு அரசியல் ஆசை ஷகீயிடம் என்று கேட்டால், சினிமாவுக்கு அடுத்துநான் அதிகம் நேசிப்பது அரசியலைத்தான். (அரசியல்வாதி மாதிரியே பேசுறாரே).

தமிழக அரசியல் நிலவரம் குறித்து எனக்கு லேட்டஸ்ட் மூவ் வரை நல்லாத் தெரியும்.அப்படி இருக்கையில் நாமும் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம்தான்இப்போது எனது அரசியல் ஆசையை விஸ்வரூபம் எடுக்கத் தூண்டியுள்ளது என்கிறார்ஷகீலா.

விரைவில் குண்டுகல்யாணம், பிந்துகோஷ், தியாகு, செந்தில், சந்திரசேகர், முரளிபோன்றவர்கள் வரிசையில் ஷகீலாவும் விரைவில் ஏதாவது ஒரு கட்சி மேடையில்ஏறினாலும் ஆச்சரியமில்லை.

இதற்கிடையே மனசுக்குள்ளே என்ற படத்தில் ஷகீலா கல்லூரி மாணவி வேடத்தல்நடிப்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

காலேஜில் பிஏ படிக்கப் போகும் ஷகீலா கூடப் படிக்கும் மாணவர்களை கவர்ந்துஇழுப்பது மாதிரி கதையாம்.

(காதலுக்கு கண்ணில்லை என்று படித்திருக்கிறோம்.. வெயிட்டும் இல்லையோ?)

இந்தப் படத்தில் ஷகீலா பாடுவது போன்ற ஒரு பாடலும் வருகிறது.. அந்தப் பாட்டுவரிகள் இதோ...

நீதானே காதலா ஓடாதே பயந்து ஓடாதே

மம்மூட்டிகிட்டே, மோகன்லாலுகட்டே

என்ன பத்தி கேட்டுப்பாரு..

சென்சாரு கிட்ட எம்பேரு சொன்னா

மூக்கு வேர்க்கும் பாரு..

வரிகளை முகம் வேர்க்க சொல்லிவிட்டுச் சிரித்தார் மனசுக்குள்ளே இயக்குர் ஸ்ரீகுரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X