ரஜினி பார்த்த தொட்டால் பூ மலரும்
பி.வாசுவின் மகன் சக்தி நடித்த தொட்டால் பூ மலரும் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். சக்தியையும் பாராட்டினார்.
பி.வாசுவின் மகன் சக்தி. இவர் சின்னத்தம்பி உள்ளிட்ட சில படங்களில் குட்டிப் பையனாக நடித்திருக்கிறார். இப்போது வயதை எட்டி விட்டதால், நாயகனாகி விட்டார்.சக்தியின் முதல் படமான தொட்டால் பூ மலரும் படத்தை பி.வாசுவே இயக்கியுள்ளார். சக்திக்கு ஜோடியாக கெளரி முஞ்சால் நடித்துள்ளார். படம் முடிந்து விட்டது. இந்த நிலையில் ரஜினிக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார் வாசு.
2 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் போர் பிரேம்ஸ் தியேட்டரில் இதற்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினி வந்து படத்தைப் பார்த்தார்.
படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்த ரஜினி, சக்தியையையும் பாராட்டினாராம்.
சூப்பர் ஸ்டாரே பாராட்டி விட்டதால் பூரித்துப் போயுள்ளாராம் சக்தி. வாசுவும்தான்.
More from Filmibeat
கதாநாயகன் குட்டிப்பையன் கெளரி முஞ்சால் சக்தி சின்னத்தம்பி தொட்டால் பூ மலரும் நுங்கம்பாக்கம் பாராட்டு பிவாசு போர் பிரேம்ஸ் தியேட்டர் ரஜினி chinnathambi four frames theatre hero nungambakkam pvasu rajini sakthi small boy thottal poo malarum


Click it and Unblock the Notifications











