»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தன்னை மும்பைப் பெண் என்று அழைப்பதை ஷமீதா ஷெட்டி விரும்புவதில்லை. அப்புறம் அவர் யாராம்?

ஷில்பா ஷெட்டியின் தங்கைதான் இந்த ஷமீதா ஷெட்டி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்காது. ராஜ்ஜியம் படத்தில்விஜயகாந்த்துடன் ஜோடியாக நடித்துள்ள இவரது சூடேற்றும் காட்சிகளை ரசிகர்கள் மறந்திருக்கவும் முடியாது.

அக்கா மாதிரி வெறும் எலும்புகளுடன் உயிர் வாழாமல் கொஞ்சம் சதைப் பிடிப்போடு இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அதுமுக்கியமாச்சே.

அவரைச் சந்திக்கும் பத்திரிக்கையாளர்களிடம் அவர் வைக்கும் ஒரே கோரிக்கை, தன்னை மும்பைப் பெண் என்று குறிப்பிடவேண்டாம் என்பது தான். நான் கன்னடத்து பொண்ணு சார் என்று சொல்லி வரும் அவர் தனது சொந்த ஊர் கர்நாடகாவில் உள்ளதென்கனரா என்றும் கூறி வருகிறார். இனி மும்பைக்காரி என்று அழைக்காதீர்கள் என அன்புக் கட்டளை இடுகிறார்.

ஏன் மும்பை பிடிக்காதா என்று கேட்டால் அப்படி எல்லாம் இல்லையே என்கிறார்.

தமிழ் தவிர கன்னட சினிமாவிலும் இடம் பிடிக்க இப்படியெல்லாம் அந்தப் பொண்ணு பேச வேண்டி இருக்கு சார் என்கிறார்சினிமா பி.ஆர்.ஓ. ஒருவர்.

ரஜினி, பிரபு தேவா கவனிப்பார்களாக...

Please Wait while comments are loading...