»   »  சகலக சாம்னா!

சகலக சாம்னா!

Subscribe to Oneindia Tamil

மலையாளத்திலிருந்து சாம்னா என்கிற அழகுப் புயல் தெலுங்குக்குத் தாவுகிறது.அப்படியே அது தமிழுக்கும் ஓடோடி வரும் என்கிறார்கள்.

தென்னிந்தியத் திரையுலகுக்கு தெவிட்டாத பல தெள்ளமுதுகளைக் கொடுத்த கேரளதேசத்திலிருந்து வந்துள்ள இன்னொரு தேவதைதான் சாம்னா. படு அழகாகஇருக்கிறார்.

நெற்றி முதல் நாசி வரை அவரது முகம் அன்றலர்ந்த தாமரை போல அப்படி ஒருஅழகு. கெட்டப்பிலும் பார்ட்டி படு செட்டப்பாகத்தான் இருக்கிறார். மலையாளத்தில்டிசம்பர், பச்சக்குதிர, பாகவசரித்ரம் மூணாம் காண்டம் என மூன்று படங்களில் நடித்தஅனுபவம் உண்டு.

மூன்று படங்களில் நடித்தாகி விட்டது, அடுத்து துட்டுப் பார்க்க கிளம்பவேண்டியதுதான் என்கிற மலையாள நாயகிகளின் இலக்கணப்படி தனது கவனத்தைபிற மொழிப் படங்கள் பக்கம் திருப்பியுள்ளார் சாம்னா.

அவரது முதல் இலக்காக தெலுங்கு அமைந்துள்ளது. தெலுங்கில் முதலில் கலக்கிவிட்டு அப்படியே தமிழுக்கும் வரும் திட்டம் உள்ளதாம் சாம்னாவிடம்.

இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் சாம்னா.இரண்டிலுமே அவர்தான் நாயகியாம்.

ஒரு படத்தில் அவருக்கு ஜோடி என்.டி.ஆரின் பேரனான தாரகரத்னா. இதில் டாக்டராகநடிக்கிறாராம் சாம்னா. இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்கிறார்களாம். இதில் சாம்னாதவிர கொக்கி படத்தில் நடித்த சஞ்சனா (பூஜா காந்தி என்ற ஒரிஜினல் பெயரில் நடிக்கிறார்), புவனா ஆகியோரும்நடிக்கிறார்கள்.

அடுத்த படம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற சிந்தாமணிகொலை கேஸ் என்ற படத்தின் ரீமேக்காம். இதில் டிஸ்கோ சாந்தியின் ஆத்துக்காரர்ஸ்ரீஹரிதான் ஹீரோவாம்.

தெலுங்கில் கொஞ்சப் படங்களில் நடித்து முடித்து விட்டு அப்படியேஅலைவரிசையை தமிழுக்கு மாற்றப் போகும் சாம்னாவுக்கு இப்பவே ரெட் கார்ப்பெட்போட்டு பொட்டியைக் காட்ட தயாரிப்பாளர்கள் சிலர் தயாராகஉள்ளனராம்.

அதானே!

Please Wait while comments are loading...