»   »  தெலுங்குக்குப் போகும் ஷங்கர்!

தெலுங்குக்குப் போகும் ஷங்கர்!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டாரை வைத்து சிவாஜியை முடித்து விட்ட ஷங்கர் அடுத்து தெலுங்குப் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம்.

பாய்ஸில் தடுக்கி விழுந்த ஷங்கர், அந்நியன் மூலம் நிமிர்ந்தார், சிவாஜியில் அவரது விஸ்வரூபத்தைக் காண அத்தனை பேரும் அகாசுர, பகாசுரபசியில் உள்ளனர்.

ஷங்கரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களிடையே இப்போது கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஷங்கருடன்பேச்சு வார்த்தையை ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே இருவரும் அந்நியனில் இணைந்துள்ளனர்.

இதேபோல ஏ.எம்.ரத்னமும் ஷங்கரை அப்ரோச் செய்துள்ளாராம். இவருக்கும், ஷங்கருக்கும் பாய்ஸ் படத்தின்போது சில சலசலப்புகள் ஏற்பட்டன.ஆனால் அதை மறந்து விட ரத்னம் ரெடியாக இருக்கிறாராம். இதேபோல இளைய தளபதி விஜய்யும் கூட ஷங்கர் படத்தில் நடிக்க ஆர்வம்தெரிவித்துள்ளாராம்.

ஆனால் அடுத்துத் தமிழ்ப் படம் இயக்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் ஷங்கர். சிவாஜியை முடித்து விட்டு, சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில்படம் ஒன்றை இயக்கப் போகிறாராம் ஷங்கர்.

திருப்பதி பிரசாத் என்பவர்தான் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார். அந்நியனுக்குப் பிறகு ஷங்கரை வைத்து தெலுங்குப் படம் இயக்க ஷங்கருடன்ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தார் பிரசாத். ஆனால் திடீரென சிவாஜி குறுக்கிட்டு விடவே இதை முடித்து விட்டு தெலுங்குக்கு வருகிறேன் என்றுகூறியிருந்தாராம் ஷங்கர்.

இதனால் ஏமாற்றமடைந்தார் பிரசாத். அவரை கூல்படுத்த சிவாஜி படத்தின் தெலுங்கு உரிமையை பிரசாத்துக்கு வழங்க ஏவி.எம். நிறுவனம்சம்மதித்ததாம். இதனால் சமாதானமடைந்த பிரசாத், சிவாஜி முடியும் வரை காத்திருப்பதாக தெரிவித்தாராம்.

இப்போது சிரஞ்சீவி பிரபுதேவா இயக்கத்தில் சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தில் நடிக்கிறார். இதை முடித்து விட்டு ஷங்கர் படத்திற்கு அவர் வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil