பசிபிக் கடலோரம் .. ஷங்கர்!

By Staff

சிவாஜி, சிவாஜி என உலகம் முழுவதும் ஆர்ப்பரித்துக் கொண்டுள்ள நிலையில், சிவாஜி ரிலீஸின்போது அதை உருவாக்கிய இயக்குநர் ஷங்கர் கனடாவில் பசிபிக் கடலில், சொகுசுக் கப்பலில் தனது குடும்பத்தோடு ஜாலி ரைடு போய்க் கொண்டிருந்தாராம்.

சிவாஜி ரிலீஸுக்கு முன்பாகவே இமயமலையிலிருந்து திரும்பி ரசிகர்களைப் போலவே ரஜினியும் படு ஆர்வமாக இருந்தார். ஆனால் இயக்குநர் ஷங்கர் மட்டும் ஆளைக் காணவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் கனடாவுக்குப் போய் விட்டார்.

சிவாஜி படம் உலகெங்கும் ரிலீஸ் ஆனபோது ஷங்கர் எங்கே இருந்தார் என்று தெரியுமா? உலகின் வட முனையில் இருந்தார் ஷங்கர். அதாவது கனடாவில் உள்ள பசிபிக் கடலில், உலகின் ஆடம்பர கப்பலில் குடும்பத்துடன் ஜாலியாக பயணித்துக் கொண்டிருந்தாராம் ஷங்கர்.

கனடாவின் வான்கூவரிலிருந்து அலாஸ்கா வரை இந்த ஆடம்பர சொகுசுக் கப்பலில் பயணம் செய்துள்ளார் ஷங்கர். எழில் வாய்ந்த பனிப் பாறைகள், வனப்பகுதிகள், மலைகளுக்கு மத்தியில் கப்பல் வளைந்து நெளிந்து சென்ற அழகை அள்ளிப் பருகியபடி சிவாஜி டென்ஷனைக் குறைத்துக் கோண்டுள்ளார் ஷங்கர்.

சில நாட்கள் இந்தக் கப்பலில் பொழுதைக் கழித்த பின்னர் மீண்டும் கனடாவுக்குப் பறந்து அங்கிருந்து இப்போது லாஸ் ஏஞ்சலெஸ் போய்ச் சேர்ந்துள்ளார். வருகிற 29ம் தேதி பட்டணத்திற்குத் திரும்பி வருகிறார்.

கப்பலில் பயணம் செய்தபோது சும்மா இருக்காமல் அடுத்த படத்திற்கான லொகேஷன்களையும், காட்சிகளையும் கூட ஷங்கர் சிந்தித்திருக்கலாம். அடுத்த படம் வந்தால் தெரியப் போகிறது!

அடுத்த படம் ரோபோதானே ஷங்கர்ஜி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X